என்னடி மீனாட்சி

ennadi meenakshi
நடிப்பு
சிவகுமார், ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன்

இசை
சங்கர் கணேஷ்

இயக்கம்
கே. நாராயணன்

தயாரிப்பு
ஏ. ரதினா

தயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ தனலட்சுமி கிரியேஷன்ஸ்

வெளீயீடு:
4 ஆகஸ்ட் 1979

வீடியோ


*****
பாடல்கள்
1. ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
படம் : என்னடி மீனாட்சி (1979)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
இசை : சங்கர் கணேஷ்
இயற்றியவர் : புலமைபித்தன்

வீடியோ


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ

சின்னப்பிள்ளை

ஆஹா

செய்யும் தொல்லை
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ

ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

தாமரைப் பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ

மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
கன்றி விட்டதோ கண்ணில் பட்டதோ

ரொம்ப நாளாகரொம்ப நாளாக எனக்கொரு ஆசை

மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது

அன்றில் பறவை

ஆஹா

கண்ட உறவை

ஆஹா

அன்றில் பறவை கண்ட உறவை
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ
ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

*****
2. மஞ்சள் வண்ண ரோஜா
படம் : என்னடி மீனாட்சி (1979)
பாடியவர்கள் : வாணி ஜெயராம்
இசை : சங்கர் கணேஷ்
இயற்றியவர் : புலமைபித்தன்

வீடியோ


ஓஓஓ
மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ

ஓஓஒ
மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ

பெண் பாவம் பொல்லாது
என்றாலும் செல்லாது
இங்கே நடக்குமா

சந்தைக்கு வந்தாச்சு
சந்தோஷம் என்னாச்சு
இன்னும் மயக்கமா

பெண் பாவம் பொல்லாது
என்றாலும் செல்லாது
இங்கே நடக்குமா

சந்தைக்கு வந்தாச்சு
சந்தோஷம் என்னாச்சு
இன்னும் மயக்கமா

இன்று போட்டியிட்டு முந்திக் கொள்ளுங்கள்
இந்த பூவில் என்ன வாசம் சொல்லுங்கள்.

ஓஓஓ மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ

செவ்வாழை பூரெண்டு
செவ்வானம் பாரென்று
ஆடும் உடலிலே

சீராட்டி பாராட்டி
சிங்கார சங்கீதம்
பாடும் இசையிலே

எந்தன் ஆசை எல்லை தாண்டிச் செல்லவோ
இந்த மேனிக்கென்ன நீந்தச் சொல்லவோ

ஓஓஓ மஞ்சள் வண்ண ரோஜா
தனி மஞ்சம் போடு ராஜா
நான் வஞ்சி என்ற எண்ணம் இல்லையோ

*****
3. ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
படம் : என்னடி மீனாட்சி (1979)
பாடியவர்கள் : எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன்
இசை : சங்கர் கணேஷ்
இயற்றியவர் : புலமைபித்தன்

வீடியோ


ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு

ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா
அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதைச் சொல்லம்மா

நீரும் நீரும் சேர்ந்தா ஒண்ணாகும்
அடி செல்லக்குட்டி வெல்லக்கட்டி
நீயும் நானும் சேர்ந்தா என்னாகும்
எனை மெல்லத் தொட்டு அள்ளிக்கட்டு

ஆடையில் என்னடி வந்தது ஆராய்ச்சி
ஆசையில் மாப்பிள்ள ஏங்குற நாளாச்சு... நாளாச்சு

கெண்டை மீனு கண்ணு
இதை கேளேன் கொஞ்சம் நின்னு

மோகத் தூண்டில் போட்டா
இவ மாட்டிக் கொள்ள மாட்டா

கெண்டை மீனு கண்ணு
இதை கேளேன் கொஞ்சம் நின்னு

மோகத் தூண்டில் போட்டா
இவ மாட்டிக் கொள்ள மாட்டா

அடி உன்னத்தான்டி கடல் கன்னி வாடி
ஒரு நாள கூத்து அட ஆள மாத்து

ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா

செங்கால் நண்டு போலே
ஒரு சின்னப் பொண்ணு மேலே

கைய வச்சா போச்சு
உன் காதல் வெட்டி பேச்சு

செங்கால் நண்டு போலே
ஒரு சின்னப் பொண்ணு மேலே

கைய வச்சா போச்சு
உன் காதல் வெட்டி பேச்சு

அடி உந்தன் மேனி அது தங்கத் தோணி
நெசந்தானா மாமா இனி நானும் நீயா

ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு
அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா
அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதை சொல்லம்மா

நீரும் நீரும் சேர்ந்தா ஒண்ணாகும்
அடி செல்லக்குட்டி வெல்லக்கட்டி
நீயும் நானும் சேர்ந்தா என்னாகும்
எனை மெல்லத் தொட்டு அள்ளிக்கட்டு

லாலா லாலா லாலா லாலா
லல லல லல லல
லாலா லாலா லாலா லாலா
லல லல லல லல

*****