சிகப்பு ரோஜாக்கள்

Sigappu Rojakkal
நடிப்பு
கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, G. சீனிவாசன், பாக்யராஜ், வடிவுக்கரசி

இசை
இளையராஜா

பாடல்கள்
கண்ணதாசன், வாலி

ஒளிப்பதிவு
P.S. நிவாஸ்

படத்தொகுப்பு
R. பாஸ்கரன்

வசனம்
பாக்யராஜ்

கதை, திரைக்கதை, இயக்கம்
பாரதிராஜா

தயாரிப்பு
J. பத்மாவதி

தயாரிப்பு நிறுவனம்
கே.ஆர்.ஜி. புரொடக்‌ஷன்ஸ்

வெளீயீடு:
28 அக்டோபர் 1978

‘சிகப்பு ரோஜாக்கள்’ 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் த்ரில்லர் திரைப்படமாகும். அதுவும் சைக்கோ கில்லர் பற்றிய திரைப்படம்.

திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞன், மும்பைக்கு வேலை பார்க்கச் சென்று, மனப்பிறழ்வுக்கு ஆளாகி, பெண்களைக் கொன்ற நிஜக்கதையின் திரைவடிவம் தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்று பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

கிராமத்தில் சிற்றன்னையின் அடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடும் இளைஞன். ஒரு பிராமணக் குடும்பத்தில் அடைக்கலமாகிறான். அந்த வீட்டு இளம்பெண் செய்யும் காரியத்தால், அவன் கெட்ட பெயருடன் அங்கிருந்து செல்ல நேரிடுகிறது.

பசி தாங்காமல் ஒரு பணக்காரர் வீட்டில் உணவு கேட்கிறான். அவன் மீது இரக்கம் கொண்டு, அவனை வீட்டோடு சேர்த்துக் கொள்கிறார்கள் அந்தத் தம்பதி. அங்கு பிரியமுடன் வளர்கிறான் அவன். ஒருநாள் கணவர் விமானத்தில் பயணம் புறப்படுகிறார். அவர் சென்ற பிறகு, இரவு வேறொரு ஆணுடன், மதுபோதையில் வீட்டுக்கு வருகிறாள் அவரின் மனைவி. அதைக் கண்டு அதிர்ந்து போகிறான் அந்தப் பையன். இந்த சூழ்நிலையில், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணம் ரத்தாகி நள்ளிரவில் வீடு திரும்புகிறார் கணவர்.

தன் மனைவி வேறொருவனுடன் உள்ளே இருப்பதைக் கண்டு கோபத்துடன் அவளைக் குத்திக் கொல்கிறார் கணவர். ‘இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க’ என்று அந்தக் கொலையை ஆமோதிக்கிறான் சிறுவன். இதனால் அவனை தன் மகனாகவே பாவித்து வளர்த்து, தன் சொத்து, வியாபாரம் அனைத்தையும் தருகிறார். மேலும் வீட்டின் அவுட் ஹவுஸில் இருந்தபடி, இம்மாதிரியான பெண்களைக் கொல்லவும் தூண்டுகிறார். அவனும் பல பெண்களுடன் பழகி அவர்களை வேட்டையாடுகிறான்.

இவை எதுவும் தெரியாமல், நாயகி அவனைக் காதலிக்கிறாள். கல்யாணம் செய்துகொள்கிறாள். ஆனால் அவனோ அவளைக் கொல்ல சமயம் பார்த்திருக்கிறான். அதற்குள் தன் கணவனைப் பற்றிய உண்மைகளை அறியும் அவள், அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறாள். ஆனால் அதற்கு அவன் வந்து விடுகிறான். அவள் தப்பித்தாளா, அவன் போலீஸிடம் பிடிபட்டானா. அவன் என்னானான் என்பதை நம்மை திரிலிங்குடன் படமாக்கியிருப்பார் பாரதிராஜா.

முதல் படமான ‘16 வயதினிலே’, இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ அடுத்து மூன்றாவது படமாக பாரதிராஜா எடுத்ததுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. சொல்லப்போனால், முதல் படமாக ‘சிகப்பு ரோஜாக்கள்’ பண்ணுவதற்கும் கதையை தயார் செய்து வைத்திருந்தார் பாரதிராஜா.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த பாரதிராஜா, கிராமக் கதைகளையே எடுத்துவரும் பாரதிராஜா, நகரத்துக் கதைகளெல்லாம் அவருக்கு எடுக்கத் தெரியாது என்று பத்திரிகைகள் எழுதின. இதில் கோபம் அடைந்துதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ பண்ணினேன் என்கிறார் பாரதிராஜா.

இருபது நாட்களில், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை எடுத்து முடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.

இரண்டு ஹீரோக்களிடம் இப்படத்தின் கதையைச் சொன்னாராம் பாரதிராஜா. ‘நெகட்டீவ் ரோலா இருக்கு வேணாம்’ என்று தவிர்த்து விட்டார்களாம் அவர்கள். ஆனால் கமலிடம் சொன்னதும் ‘பண்ணிருவோம்’ என்று ஏற்றுக் கொண்டாராம் கமல். ஆனால் இப்படியொரு ஸ்டைலீஷான, சைக்கோத்தனமான கதாபாத்திரத்தை கமலைத் தவிர வேறு யாரும் இவ்வளவு அற்புதமாக செய்திட முடியாது என்று சொல்லும் விதமால மிகவும் அசால்ட்டாகச் செய்திருப்பார் கமல்.

வடிவுக்கரசியின் முதல் படம் இதுதான். இரண்டே காட்சிகள்தான் என்றாலும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருப்பார்.

படத்தின் பின்னணி இசையை பத்தாயிரம் ரூபாய் செலவில், ஒன்றரை நாளில் முடித்துக்கொடுத்தாராம் இளையராஜா.

‘சிகப்பு ரோஜாக்கள்’ ‘ஒரு கைதியின் டைரி’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களில் பெண் கேரக்டருக்கு சாரதா என்று பெயர்தான் வைத்திருப்பார் பாரதிராஜா. காரணம் தெரியவில்லை.

இப்படத்தில் ஆங்கிலப்படங்களுக்கு இணையானதாக நிவாஸின் ஒளிப்பதிவு அமைந்திருக்கும்.

இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டியெடுத்துவிடும். பின்னணி இசையை பத்தாயிரம் ரூபாய் செலவில், ஒன்றரை நாளில் முடித்துக்கொடுத்தாராம் இளையராஜா.

படத்துக்கு பாடல்களே வேண்டாம் என கமல் சொல்லி விட்டாலும், இரண்டு பாடல்களை கதையின் வீரியம் குறைக்காமல் செருகியிருப்பார் பாரதிராஜா. இளையராஜாவின் இசையில் ’நினைவோ... ஒரு பறவை...’ ‛இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு’ என அந்த இரண்டு பாடல்களும் ஹிட் அடித்து இன்றளவும் நம் நினைவில் நிற்பவை.

பாரதிராஜா, கமல், ஸ்ரீதேவி, நிவாஸ், இளையராஜா, பாக்யராஜ் கூட்டணியில் ’சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தந்தது. 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. கமல்ஹாசன் அவர்கள் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். பாரதிராஜா அவர்கள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். இத்திரைப்படம் தெலுங்கில் 'ஈரா குலாபிலு' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ‘ரெட் ரோஸஸ்’ எனும் பெயரில் 1980 ஆண்டில் ராஜேஷ் கன்னா நடிப்பில் இயக்குநர் பாரதிராஜா மீண்டும் படமாக்கினார்.

1978 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று தீபாவளி பண்டிகை ஒட்டி வெளியான இத்திரைப்படத்தோடு மொத்தம் 11 தமிழ் திரைப்படங்கள் வெளியானது. அதில் கமல்ஹாசன் நடித்த மனிதரில் இத்தனை நிறங்களா, அவள் அப்படித்தான் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடித்த தப்பு தாளங்கள் போன்ற படங்களும் அடங்கும். ஆனால், அவற்றில் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆனந்த விகடன் பத்திரிக்கை இப்படத்திற்கு 100க்கு 53 மதிப்பெண் வழங்கி பாராட்டியது.

வீடியோ


*****
பாடல்கள்
1. நினைவோ ஒரு பறவை
படம் : சிகப்பு ரோஜாக்கள் (1978)
பாடியவர்கள் : கமல்ஹாசன், எஸ். ஜானகி
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி

வீடியோ


பெண்: ம்ஹூம் ம் ம்ஹூம்
ம்ஹூம் ம் ம்ஹூம்
நாநா நந நாநா நந நா

பெண்: நினைவோ ஒரு பறவை
ஆண்: பா பபப்பப்பா பா பபப்பப்பா
பெண்: விரிக்கும் அதன் சிறகை
ஆண்: பா பபப்பப்பா பா பபப்பப்பா
பெண்: பறக்கும் அது கலக்கும்
தன் உறவை

ஆண்: நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
நினைவோ ஒரு பறவை

ஆண்: ரோஜாக்களில்
பன்னீர்த்துளி
வடிகின்ற தேன்
அது என்ன தேன்

பெண்: அதுவல்லவோ
பருகாத தேன்
அதை இன்னும் நீ
பருகாததேன்

ஆண்: அதற்காகத்தான்
அலைபாய்கிறேன்

பெண்: வந்தேன்
தரவந்தேன்

ஆண்: நினைவோ ஒரு பறவை
பெண்: பா பபப்பப்பா பா
ஆண்: விரிக்கும் அதன் சிறகை
பபப்பப்பா பா பபப்பப்பா
ஆண்: பறக்கும் அது கலக்கும்
பெண்: பா பா பா
ஆண்: தன் உறவை

பெண்: நினைவோ ஒரு பறவை

பெண்: பனிக்காலத்தில்
நான் வாடினால்
உன் பார்வை தான்
என் போர்வையோ

ஆண்: அணைக்காமல் நான்
குளிர் காய்கிறேன்
அதற்காகத்தான்
மடி சாய்கிறேன்

பெண்: மடி என்ன உன்
மணி ஊஞ்சல

ோ ஆண்: நீ தான்
இனி நான் தான்
நினைவோ ஒரு பறவை
பெண்: பா பபப்பப்பா பா
ஆண்: விரிக்கும் அதன் சிறகை
பெண்: பபப்பப்பா பா பபப்பப்பா
ஆண்: பறக்கும் அது கலக்கும்
பெண்: பா பா பா
ஆண்: தன் உறவை

பெண்: நினைவோ ஒரு பறவை
ஆண்: பா பபப்பப்பா பா
பெண்: விரிக்கும் அதன் சிறகை
ஆண்: பபப்பப்பா பா பபப்பப்பா
பெண்: பறக்கும் அது கலக்கும்
ஆண்: பா பா பா
பெண்: தன் உறவை
நினைவோ ஒரு பறவை

*****
2. இந்த மின்மினிக்கு
படம் : சிகப்பு ரோஜாக்கள் (1978)
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்

வீடியோ


குழு: ரூரூ ரூரூ ரூரூ ரூரூரூ
ரூரூ ரூரூ ரூரூ ரூரூரூ
ரூரூரூ ரூரூரூ

ஆண்: மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
அடி கண்ணே
அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே

பெண்: இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
என் மன்னா
அழகு கண்ணா
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே
இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது

பெண்: இந்த மங்கை
இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன்
எனைச் சேர்க்கும் கடல்

ஆண்: இந்த கடல்
பல கங்கை நதி
வந்து சொந்தம்
கொண்டாடும் இடம்

பெண்: என்னுடல்
உனக்கென்றும் சமர்ப்‌பணம்
ஆண்: நநந நநந
அடி என்னடி
உனக்கின்று அவசரம்

பெண்: நநந நநந
நநந நநந
நநந நநந நா

ஆண்: இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
அடி கண்ணே
அழகுப் பெண்ணே

பெண்: காதல்
ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே

ஆண்: இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது

குழு: பபப ப பபப
பபப பப
ப பப ப

ஆண்: தோட்டத்திலே
பல பூக்கள் உண்டு
நீதானே என்
சிகப்பு ரோஜா

பெண்: இன்றும் என்றும்
என்னை உன்னுடனே
நான் தந்தேன்
என் ஆசை ராஜா

ஆண்: மலர் உன்னை
பறித்திட துடிக்கிறேன்

பெண்: நநந நநந நநந
இனி தடையென்ன
அருகினில் இருக்கிறேன்

ஆண்: நநந நநந நநந
நநந நநந நநந ந

ா பெண்: இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
என் மன்னா
அழகு கண்ணா

ஆண்: காதல்
ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே

பெண்: இந்த மின்மினிக்கு
கண்ணில் ஒரு
மின்னல் வந்தது
நநந நநந நநந

*****