சட்டம் என் கையில்

sattam en kaiyil
நடிப்பு
கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, சுருளி ராஜன், சத்யராஜ்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
என். கே. விஸ்வநாதன்

பாடல்கள்
கண்ணதாசன்

படத்தொகுப்பு
வி. ராஜகோபால்

திரைக்கதை, இயக்கம்
டி. என். பாலு

தயாரிப்பு
டி. என். பாலு

தயாரிப்பு நிறுவனம்
பாலு சினி ஆர்ட்ஸ்

வெளீயீடு:
14 ஜூலை 1978

சட்டம் என் கையில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, சுருளிராஜம், சத்யராஜ், ஸ்ரீகாந்த், எஸ்.ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன், காந்திமதி, வி. கோபாலகிருஷ்ணன், லூஸ் மோகன், உசிலமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சத்யராஜ் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்.

இத்திரைப்படத்தை இந்தி மொழியில் 1982 ஆண்டில் இயக்குனர் டி. ராமராவ் ‘ஏ டொ கமால் ஹோ கயா’ (yeh To Kamaal Ho Gaya) எனும் பெயரில் கமல்ஹாசன், பூனம் தில்லான் ஆகியோரை வைத்து மீண்டும் படமாக்கினார்.

கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். ‘சொர்க்கம் மதுவிலே’, ‘கடை தேங்காயோ’, ‘ஆழ கடலில்’, ‘ஒரே இடம்’, ‘மேரா நாம் அப்துல்லா’ என ஐந்து பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

வீடியோ


*****
பாடல்கள்
1. சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
படம் : சட்டம் என் கையில் (1978)
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்

வீடியோ


பப பப பப்பா
பப பப பப்பா
பப பப பப்பா
பப பப பப்பா

சொர்க்கம் மதுவிலே யஹூ யஹூ
சொக்கும் அழகிலே யே யஹூ

மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்

இன்பம் இரவு தான்
பப்பா பப பப
எல்லாம் உறவு தான்
பப்பா பப பப

இன்பம் இரவு தான்
பப்பா பப பப
எல்லாம் உறவு தான்
பப்பா பப பப

காதல் ஒரு கீதம் அதைக் கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்

காதல் ஒரு கீதம் அதைக் கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்

குடிக்கிறேன் அணைக்கிறேன்
நினைத்ததை மறக்கிறேன்

சொர்க்கம் மதுவிலே
ஹோ பப பப
சொக்கும் அழகிலே
ஹோ ரி பப

மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான்
ரப ரப ரப ரப ரப ரப
எல்லாம் உறவு தான்
ரப பப பப

பாலில் பழம் போலே
இந்தப் பாவைக் கொஞ்சுவாள்
ஆஹா

பள்ளி வரச்சொல்லி
இந்தத் தோகை கெஞ்சுவாள்
ஆஹா ஹா ஹா

பாலில் பழம் போலே
இந்தப் பாவைக் கொஞ்சுவாள்
ஆஹ்

பள்ளி வரச்சொல்லி
இந்தத் தோகை கெஞ்சுவாள்

மறந்து நான் ம்ம்ம்ம்ம்
மயங்கவா ம்ம்ம்ம்ம்ஹும்
இதற்கு நான் இணங்கவா

திராட்சை ரசம் ஊற்றி
மனத்தீயை அணைக்கிறேன்

செவ்வாய் இதழ் பெண்ணில்
எனை மூழ்கிக் களிக்கிறேன்

நடந்த நாள் ம்ம்ம்ம்ம்
மறக்கவே ம்ம்ம்ம்ம்ஹும்
நடக்கும் நாள் சிறக்கவே

சொர்க்கம் மதுவிலே
லலா லல லலா
சொக்கும் அழகிலே
லலா லல லலா

மது லலா
தரும் லலா
சுகம் லலா
சுகம் லலா
எதில் லலா
வரும் லலா
நிதம் லலா
நிதம் லலா

இன்பம் இரவு தான்
லலா லல லலா
பப பா பா பா
எல்லாம் உறவு தான்
லலா லல லலா
பப பா பா பா
லலா லல லலா
பப பா பா பா
லலா லல லலா
பப பா பா பா

*****