அவள் அப்படித்தான் ![]() நடிப்பு
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, சிவச்சந்திரன், சரிதாஇசை
இளையராஜாபாடல்கள்
கண்ணதாசன், கங்கை அமரன்ஒளிப்பதிவு
நல்லுசாமி, எம்.என். ஞானசேகரன்படத்தொகுப்பு
ரவீந்திரன்கதை
அனந்துதிரைக்கதை
சி. ருத்ரைய்யா, வண்ணநிலவன், சோமசுந்தரேஸ்வர்இயக்கம்
சி. ருத்ரைய்யாதயாரிப்பு
சி. ருத்ரைய்யாதயாரிப்பு நிறுவனம்
குமார் ஆர்ட்ஸ்வெளீயீடு: 30 அக்டோபர் 1978வீடியோ இப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களில் நிறைவுற்றது. ஆரி 2பி என்ற சிறிய கேமராவில் 27 ரீல்களில் படத்தை பதிவு செய்து அதனை 14 ரீல்களாக படத்தொகுப்பு செய்யப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் கேமராவை கையில் வைத்துக் கொண்டு கதாபாத்திரத்தின் பின்னாலேயே சென்று படமாக்கப்பட்டிருக்கிறது. 1978ஆம் வருடம் அக்டோபர் 30, தீபாவளி அன்று வெளியானது. நடித்திருந்த மூவருமே முன்னணி நட்சத்திரங்களாக இருந்தபோதிலும் வர்த்தக ரீதியாக இப்படம் தோல்வியுற்றது. அச்சமயம் அதே தீபாவளி பண்டிகையில் வெளிவந்த கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா மற்றும் ரஜினிகாந்தின் தப்பு தாளங்கள் ஆகிய பெரும் படங்களுடன் போட்டியிட முடியாமையும் ஒரு காரணமானது. இருப்பினும் திரையுலகைச் சேர்ந்த பலரும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டினார். இளையராஜா அவர்கள் இப்படத்தில் பாடல் இசை இயற்றியுள்ளார். கங்கை அமரன் மற்றும் கண்ணதாசன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். கமல்ஹாசன், கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். கே.ஜே. யேசுதாஸ் பாடிய ‘உறவுகள் தொடர்கதை’ பாடல் பியானோ இசையில் உருவாக்கப்பட்டிருந்தது. எஸ்.ஜானகி ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ (ராகம் பந்துவராளி) எனும் பாடலைப் பாடியிருந்தார். கமல்ஹாசன் தனது சொந்தக் குரலில் ‘பன்னீர் புஷ்பங்களே’ (ராகம் ரேவதி) எனும் பாடலைப் பாடியிருந்தார். 1978 ஆண்டின் தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு பெற்றது இப்படம். சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினையும் நல்லுசாமி மற்றும் ஞானசேகரன் இப்படத்திற்காக வாங்கினார்கள். நடிகை ஸ்ரீபிரியா தமிழக அரசின் சிறப்பு பரிசைப் பெற்றார். *****
பாடல்கள்
1. உறவுகள் தொடர்கதை
படம் : அவள் அப்படித்தான் (1978) பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ் இசை : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் வீடியோ உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே இனியெல்லாம் சுகமே |
|
மண்வாசனை (1983) மே மாதம் (1994) மூன்றாம் பிறை (1982) அபூர்வ சகோதரர்கள் (1989) ஜானி (1980) கலைஞன் (1993) இதயம் (1991) ஆசை (1995) மன்மதன் (2004) ரன் (2002) குணா (1991) வெந்து தணிந்தது காடு (2021) புஷ்பா (2021) பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) |
|
|