|
|
அபூர்வ ராகங்கள் ![]() நடிப்பு
கமல்ஹாசன், சுந்தரராஜன், ஸ்ரீவித்யா, ஜெயசுதா, நாகேஷ், ரஜினிகாந்த், திடீர் கன்னையா இசை
எம்.எஸ். விஸ்வநாதன்பாடல்கள்
கண்ணதாசன்ஒளிப்பதிவு
பி.எஸ். லோகநாத்படத்தொகுப்பு
என்.ஆர். கிட்டுகதை, வசனம், இயக்கம்
கே. பாலசந்தர்தயாரிப்பாளர்கள்
வி. கோவிந்தராஜன், ஜெ. துரைசாமிதயாரிப்பு நிறுவனம்
கலாகேந்திரா பிலிம்ஸ்வெளீயீடு:
15 ஆகஸ்ட் 1975வீடியோ ***** பாடல்கள்
1. ஏழு ஸ்வரங்களுக்குள்
படம் : அபூர்வ ராகங்கள் (1975) பாடியவர் : வாணி ஜெயராம் இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் வீடியோ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் ம்ம்ம் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆஆஆ ஆஆஆ ஆஆஆ காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ல்ல்ல் எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று நமக்காக நம் கையால் செய்வது நன்று ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல வேதனையும் மாறும் மேகத்தைப் போல ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ***** 2. அதிசய ராகம் ஆனந்த ராகம்
படம் : அபூர்வ ராகங்கள் (1975) பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ் இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் வீடியோ ஆனந்த ராகம் ம்ம்ம் அழகிய ராகம் ம்ம்ம் அபூர்வ ராகம் அதிசய ராகம் ஆனந்த ராகம் ம்ம்ம் அழகிய ராகம் ம்ம்ம் அபூர்வ ராகம் அதிசய ராகம் வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் மோகம் ம்ம்ம் மோகம் வசந்த காலத்தில் மழை தரும் மேகம் அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் இந்திர லோகத்து சக்கரவாகம் அதிசய ராகம் ஆனந்த ராகம் ம்ம்ம் அழகிய ராகம் ம்ம்ம் அபூர்வ ராகம் பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் அது என் யோகம் ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி இன்னுமா புரியல ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி அவளொரு பைரவி அவளொரு பைரவி அதிசய ராகம் ஆனந்த ராகம் ம்ம்ம் அழகிய ராகம் ம்ம்ம் அபூர்வ ராகம் ***** 3. கேள்வியின் நாயகனே
படம் : அபூர்வ ராகங்கள் (1975) பாடியவர்கள் : வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகா இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் வீடியோ பெண் : கேள்வியின் நாயகனே ஏ இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா கேள்வியின் நாயகனே ஏ இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பெண் : இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பெண் : பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் கன்று பால் அருந்தும் போதா காளை வரும் பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் கன்று பால் அருந்தும் போதா காளை வரும் பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா கதை எப்படி அதன் முடிவெப்படி கதை எப்படி அதன் முடிவெப்படி பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பெண் : தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான் பெண் : தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான் அலமேலு அவன் முகத்தை காண்பாளோ மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ செல்வாளோ செல்வாளோ பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பெண்: பதில் ஏதய்யா கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் பெண் : பார்த்துக் கொண்டால் பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக் கொண்டால் அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன பெண் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே பெண் : நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே பெண் : நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன பெண் : உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன பெண் :உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன பெண் : உடல் எப்படி பெண் : ஒன்றில் இருந்தாற்படி பெண் : மனம் எப்படி பெண் : நீ விரும்பும் படி பெண் : கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா பெண் இருவர் : இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் பெண் : பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா பிரியத்துடன் பக்கத் திரு முருகா திரு முருகா திரு முருகா ***** 4. கைக்கொட்டி சிரிப்பார்கள்
படம் : அபூர்வ ராகங்கள் (1975) பாடியவர் : காயல் ஷேக் முகம்மது இசை : எம்.எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் வீடியோ ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே ஆண் : கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே தலைமாறி கால் மாறுமே அங்கு சொந்தங்கள் தடுமாறுமே ஆண் : வீணை தன் நரம்பை விரல் மீட்டும் போது மிருதங்க ஒலி தோன்றுமா விளக்கேற்றி எடுத்து பகல் நேரம் வைத்தால் இழைக்கின்ற ஒளி தோன்றுமா ஆண் : கறக்கின்ற பாலை சுரக்கின்ற மடிக்குள் அனுப்புதல் நடக்காதம்மா கறக்கின்ற பாலை சுரக்கின்ற மடிக்குள் அனுப்புதல் நடக்காதம்மா பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால் நடக்கவும் கூடாதம்மா ஆண் : விளையாட்டு கல்யாணமே தரும் விபரீத உறவாகுமே தலைமாறி கால் மாறுமே அங்கு சொந்தங்கள் தடுமாறுமே ஆண் : கைக்கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் ***** |