அவள் ஒரு தொடர்கதை

aval oru thodarkathai
நடிப்பு
சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, கமல்ஹாசன், விஜயகுமார், ஜெய்கணேஷ், எம்.ஜி. சோமன், ஸ்ரீபிரியா, லீலாவதி, ராஜேஷ், திடீர் கண்ணையா, ராமகிருஷ்ணா

இசை
எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல்கள்
கண்ணதாசன்

ஒளிப்பதிவு
பி.எஸ். லோகநாத்

படத்தொகுப்பு
என்.ஆர். கிட்டு

கதை
எம்.எஸ். பெருமாள்

திரைக்கதை, வசனம், இயக்கம்
கே. பாலசந்தர்

தயாரிப்பு
இராம. அரங்கண்ணல்

தயாரிப்பு நிறுவனம்
ஆண்டாள் மூவீஸ்

வெளீயீடு:
13 நவம்பர் 1974

வீடியோ


*****
பாடல்கள்
1. தெய்வம் தந்த வீடு
படம் : அவள் ஒரு தொடர்கதை (1974)
பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
இயற்றியவர் : கண்ணதாசன்

வீடியோ


ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஓஓஓ ஓஓஓ ஹ
ோ தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு

தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன

நான் கேட்டு
தாய் தந்தை படைத்தாரா
ஆஆ.ஆ ஆஆஆ ஆஆஆ

நான் கேட்டு
தாய்தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை
எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம்
இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம்
தின்றால் போச்சு
இதுதான் என் கட்சி

ஆதி வீடு
அந்தம் காடு
இதில் நான் என்ன
அடியே நீ என்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன

தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு.

வெறும் கோவில்
இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும்
தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி
போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன்
இதுதான் என் கட்சி

கொண்டதென்ன
கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன
மனந்த தாரம் என்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன

தெளிவாகத் தெரிந்தாலே
சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே
வேதாந்தம்
மண்ணைத் தோண்டி
தண்ணீர் தேடும்
அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி
ஞானம் கண்டேன்
இதுதான் என் கட்சி

உண்மை என்ன
பொய்மை என்ன
இதில் தேன் என்ன
கடிக்கும் தேள் என்ன
ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன

தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு