வசந்த மாளிகை

vasanthamaligai
நடிப்பு
சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, வி.எஸ். ராகவன், கே. பாலாஜி, நாகேஷ், பண்டரிபாய், வி.கே. ராமசாமி, சிஐடி சகுந்தலா, ஸ்ரீதேவி, ஸ்ரீகாந்த், சுகுமாரி, மேஜர் சுந்தர்ராஜன், செந்தாமரை, குமாரி பத்மினி

பாடல்கள்
கவிஞர் கண்ணதாசன்

ஒளிப்பதிவு
ஏ.வின்சென்ட்

இசை
கே.வி. மகாதேவன்

கதை
கௌசல்யா தேவி கோதுரி

திரைக்கதை
பாலமுருகன்

இயக்கம்
கே.எஸ். பிரகாஷ் ராவ்

தயாரிப்பு
டி. ராமநாயுடு

தயாரிப்பு நிறுவனம்
விஜய சுரேஷ் கம்பைன்ஸ்

வெளீயீடு: செப்டம்பர் 26, 1972


வீடியோ


     வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றில் ‘காதல் காவியம்’ என ரசிகர்களால் என்றும் புகழப்படும் படம் ‘வசந்த மாளிகை’. உடலும் மனமும் முதிர்ந்த ஒரு காதலை கட்டமைத்து காட்டியது வசந்த மாளிகை.

கட்டபொம்மனாக கர்ஜித்த சிவாஜி கணேசன் தான் மயிலிறகால் வருடுவது போல் மிகவும் மென்மையாக ‘லத்தா...’ என்று அழைத்து பரவசப்படுத்துவார். சிவாஜியின் அருமையான நடிப்பில் வெளியான தலைசிறந்த பத்து படங்களில் இப்படமும் ஒன்றாகும்.

காதல் மட்டுமல்ல, தன்மானமும் சுயமரியாதையும் கூட முக்கியமே என்பதை நாயகி பாத்திரத்தின் மூலம் எடுத்துக் காட்டியது இப்படம். இப்படம் வாணிஸ்ரீ யின் திரையுலக வாழ்வில் மிகவும் அரிதினும் அரிதான படம்.

கே.வி. மகாதேவனின் இசையில், கண்ணதாசனின் அற்புத வரிகளில், ‘மயக்கமென்ன’, ‘யாருக்காக’, ‘இரண்டு மனம் வேண்டும்’, ‘கலைமகள் கைப்பொருளே’ போன்ற பாடல்கள் இன்றைக்கும் நம் செவிகளில் பசுமையாக இசைத்துக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் 8 பாடல்களை டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, பி. வசந்தா ஆகியோர் பாடியிருந்தனர்.

‘மயக்கமென்ன இந்த மௌனமென்ன?’ பாடல் நடுவில் வருகிற ஸ்லோ மோஷன் காட்சி தான் தமிழில் முதன் முதலாக எடுக்கப்பட்ட ஸ்லோ மோஷன் காட்சியாகும்.

கேரளாவில் படம் சோகத்தில் முடிந்தால் நன்றாக இருக்கும் என விநியோகஸ்தர் நினைத்ததால், ‘யாருக்காக’ பாடல் காட்சியோடு படம் நிறைவடைவதாக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. அங்கும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழகத்திலும் இலங்கையிலும் 200 நாட்களைக் கடந்து ஓடிய இப்படம் அந்த காலத்திலேயே ரூ. 1 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்தது. 750 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி இப்படம் சாதனை படைத்தது. சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய 3 திரையரங்குகளில் 271 நாட்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக இப்படம் ஓடியது.

கொழும்பு வெலிங்டன் திரையரங்கில் இப்படம் 287 நாளும் யாழ்ப்பாணம் திரையரங்கில் 207 நாளும் இப்படம் ஓடியது. யாழ்ப்பாணத்தின் முதல் வெள்ளி விழா படம் இதுதான்.

முதல் முறையாக நவீனப்படுத்தப்பட்ட நிலையில் இப்படம் மார்ச் 8, 2013ல் வெளியிடப்பட்டது. தற்போது மீண்டும் நவீன டிஜிட்டல் முறைக்கேற்ப இப்படம் உருமாற்றம் பெற்று ஜூன் 21, 2019 முதல் தமிழகமெங்கும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.