தெய்வம்

dheivam
நடிப்பு
கிருபானந்த வாரியார்,ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, சிவக்குமார், மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், அசோகன், ஏ.வி.எம்.ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், முத்துராமன், நாகேஷ், வி.எஸ்.ராகவன்

பாடல்கள்
கவிஞர் கண்ணதாசன்

இசை
குன்னக்குடி வைத்தியநாதன்

இயக்கம்
எம்.ஏ.திருமுகம்

தயாரிப்பு
எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர்

தயாரிப்பு நிறுவனம்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்

வெளீயீடு: நவம்பர் 4, 1972


வீடியோ


*****

பாடல்கள்
1. மருதமலை மாமணியே
படம் : தெய்வம் (1972)
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்கள் : மதுரை சோமசுந்தரம்

வீடியோ


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
ஆஆஆஆஆ... ஆஆஆஆஆ...
மருத மலை மருத மலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆ...
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆ...

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆஆஆ... ஆ... ஆஆஆஆஆ...
ஆஆஆஆஆஆ... ஆ... ஆஆஆஆஆஆ...
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஆஆ...
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஆஆ...

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆஆ... ஆ... ஆஆஆஆஆ... ஆஆஆஆஆஆ...

தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

*****
2. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
படம் : தெய்வம் (1972)
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் : பெங்களூர் ரமணியம்மாள்

வீடியோ


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்

தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்

தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை

தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
முருகப் பெருமானை

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

வேல் முருகா
அரோகர
வெற்றி வேல் முருகா

வேல் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகா

வேல் முருகா
அரோகரா
வெற்றி வேல் முருகா

வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா

*****