சொர்க்கம்

sorgam
நடிப்பு
சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, ராஜஸ்ரீ, கே. பாலாஜி, ஆர். முத்துராமன், ஆர்.எஸ். மனோகர், எம்.ஆர்.ஆர். வாசு, நாகேஷ், சச்சு, கனகதுர்கா, வி. நாகையா, ஓ.ஏ.கே. தேவர், செந்தாமரை, என்னத்த கன்னையா, எம். பானுமதி, கல்லாப்பெட்டி சிங்காரம், கருப்பு சுப்பையா

இசை
எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல்கள்
ஆலங்குடி சோமு, கண்ணதாசன்

ஒளிப்பதிவு
அமிர்தம்

படத்தொகுப்பு
டி.ஆர். சீனிவாசலு

கதை
நன்னு

திரைக்கதை
சக்தி டி.கே. கிருஷ்ணசாமி

இயக்கம்
டி.ஆர். ராமண்ணா

தயாரிப்பு
டி.ஆர். சக்ரவர்த்தி

தயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்

வெளீயீடு:
29 அக்டோபர் 1970

*****
பாடல்கள்
1. பொன்மகள் வந்தாள்

படம் : சொர்க்கம் (1970)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன் மற்றும் குழு
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

வீடியோ


ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல்
பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம்
கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே ஏஏஏ

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக

குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

குழு : லலலல லலலல லலலல

ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம்
விழியெல்லாம் நவரசம்

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல்
பொங்கும் தேனாக

குழு : லல்லல்ல லா
லல்லா லல்லல்ல லா
லா லா லா
லா லா லா
லா லா லா
லா லா லா

ஆண் : செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
ராஜனாக
இன்பத்தின் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்
வீரனாக
திருமகள் சம்மதம்
தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி
மலர்வதோ புன்னகை

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல்
பொங்கும் தேனாக

குழு: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஆண் : கண்மலர் கொஞ்சம்
கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக

குழு: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

*****