அன்பே வா

anbe vaa
நடிப்பு
எம்.ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜா தேவி, டி.ஆர். ராமச்சந்திரன், நாகேஷ், எஸ்.ஏ. அசோகன், மனோரமா, டி.பி. முத்துலட்சுமி

பாடல்கள்
வாலி

இசை
எம்.எஸ். விஸ்வநாதன்

ஒளிப்பதிவு
எஸ். மாருதி ராவ், பி.என். சுந்தரம்

படத்தொகுப்பு
ஆர்.ஜி. கோபி

கதை, இயக்கம்
ஏ.சி. திருலோகச்சந்தர்

தயாரிப்பு
எம். முருகன்

தயாரிப்பு நிறுவனம்
ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்

வெளீயீடு:
14 ஜனவரி 1966

*****

பாடல்கள்
1. லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
படம் : அன்பே வா (1966)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர் : பி. சுசீலா

வீடியோ


லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்

தக்க திமி தா
என்ற தாளத்தில் வா
தக்க திமி தா
என்ற தாளத்தில் வா
தக்க திமி தா

காதில் மெல்ல காதல் சொல்ல

காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல

சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா?
சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா?

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா

கண்ணைத் தொட்டு
நெஞ்சைத் தொட்டு
பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில்
யாரோ பாட
காற்றில் வந்தது ஓசை

ஓஹோஹோஹோ ஆசை
ஓஹோ ஹோஹோஹோஹோ ஓசை

கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு
பெண்ணைத் தொட்டது ஆசை
ஆசைக் கனவில் யாரோ பாட
காற்றில் வந்தது ஓசை

என்றும் இல்லாமல்
என்னோடு ஒன்றும் சொல்லாமல்
என்றும் இல்லாமல்
என்னோடு ஒன்றும் சொல்லாமல்
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன?
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன?

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா
என்ற தாளத்தில் வா
தக்க திமி தா

சிட்டுக்குருவி
தொட்டுப் பழகி
சொல்லித் தந்தது பாடம்
பெட்டைக் குருவி
வெட்கம் வந்து
பட்டுச் சிறகை மூடும்

ஓஹோஹோஹோ ஓஹோ
ஓஹோ ஹோஹோஹோஹோ ஓஹோ

சிட்டுக்குருவி
தொட்டுப் பழகி
சொல்லித் தந்தது பாடம்
பெட்டைக் குருவி
வெட்கம் வந்து
பட்டுச் சிறகை மூடும்

காதல் பறவைகளே
ஒன்றாகக் கொஞ்சும் நேரத்தில்
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ?
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ?

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா
என்ற தாளத்தில் வா
தக்க திமி தா

காதில் மெல்ல காதல் சொல்ல
சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா?
சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா?

லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா

*****