வல்லவனுக்கு வல்லவன்

vallavanukku vallavan
நடிப்பு
ஜெமினி கணேசன், தங்கவேலு, மனோகர், அசோகன், மணிமாலா, மனோரமா, சாவித்ரி கணேசன், டி.பி. முத்துலட்சுமி, ராமதாஸ், பக்கிரிசாமி,

இசை
வேதா

பாடல்கள்
கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம்

ஒளிப்பதிவு
எஸ்.எஸ். லால்

படத்தொகுப்பு
எல். பாலு

திரைக்கதை, வசனம்
ஏ.எல். நாராயணன்

இயக்கம்
ஆர். சுந்தரம்

தயாரிப்பாளர்
ஆர். சுந்தரம்

தயாரிப்பு நிறுவனம்
மாடர்ன் தியேட்டர்ஸ்

வெளீயீடு:
28 மார்ச் 1965

வீடியோ


1965ஆம் ஆண்டு வெளிவந்த வல்லவனுக்கு வல்லவன் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் 100 வது திரைப்படமாகும். 1963 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படமான உஸ்தாதோன் கே உஸ்தாத் படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தில், ஜெமினி கணேசன், தங்கவேலு, மனோகர், அசோகன், ராமதாஸ் , மணிமாலா , மனோரமா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தமிழ் மொழியில் வெளியான அதிரடி திரில்லர் திரைப்படமாகும்.

இப்படத்தை டி.ஆர்.சுந்தரத்தின் மகன் ஆர்.சுந்தரம் இயக்கினார். ஏ.எல்.நாராயணன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதினார்.

இப்படம் மாடர்ன் தியேட்டர்ஸின் 100வது படமாகும், மேலும் இது 1963 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படமான உஸ்தாடன் கே உஸ்தாத்தின் ரீமேக் ஆகும்.

வேதா இசையமைக்க , கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் பாடல்களை எழுதியுள்ளனர்.

‘மனம் என்னும்’ பாடல் 1961 ஆம் ஆண்டு வெளியான ‘ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை’ படத்தின் ‘சௌ சால் பெஹ்லே’ பாடலை அடிப்படையாகக் கொண்டது. ‘ஓர் ஆயிரம் பார்வையிலே’ பாடல் உஸ்தாதோன் கே உஸ்தாத் படத்தின் ‘சௌ பார் ஜனம் லெங்கே’ பாடலின் அடிப்படையிலானது.

கல்கி இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனம் எழுதியிருந்தாலும், இத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

*****

பாடல்கள்
1. ஓராயிரம் பார்வையிலே
படம் : வல்லவனுக்கு வல்லவன் (1965)
பாடியவர் : டி.எம்.செளந்தரராஜன்
இசை : வேதா
இயற்றியவர் : கண்ணதாசன்

வீடியோ


நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்

*****