|
|
சர்வர் சுந்தரம் ![]() நடிப்பு
நாகேஷ், ஆர். முத்துராமன், கே.ஆர். விஜயா, எஸ்.வி. ரங்கா ராவ், எஸ். ராமாராவ், மேஜர் சுந்தரராஜன், எஸ்.என். லட்சுமி, மனோரமா, ரமணி திலகம்இசை
எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்திஒளிப்பதிவு
எஸ். மாருதி ராவ்பாடல்கள்
கண்ணதாசன், வாலி, வி. சீதாராமன்படத்தொகுப்பு
எஸ். பஞ்சாபி, ஆர். விட்டல்கதை, திரைக்கதை
கே. பாலசந்தர்இயக்கம்
கிருஷ்ணன் - பஞ்சுதயாரிப்பு
ஏ.வி. மெய்யப்பன்தயாரிப்பு நிறுவனம்
குகன் பிலிம்ஸ்வெளீயீடு: 11 டிசம்பர் 1964*****
பாடல்கள்
1. அவளுக்கு என்ன அழகிய முகம் படம் : சர்வர் சுந்தரம் (1964) பாடியவர்கள் : டி.எம். செளந்திரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி இசை : எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடலாசிரியர் : வாலி வீடியோ அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஆண் : ஹோ அழகு ஒரு மேஜிக் டச் ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஓஓஓ ஹோ அழகு ஒரு மேஜிக் டச் ஓஓஓ ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஆண் : ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு பெண் : அவனுக்கென்ன இளகிய மனம் அவளுக்கென்ன அழகிய முகம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஆண் : சிற்றிடை என்பது பெண் : முன்னழகு ஆண் : சிறு நடை என்பது பெண் : பின்னழகு ஆண் : சிற்றிடை என்பது பெண் : முன்னழகு ஆண் : சிறு நடை என்பது பெண் : பின்னழகு ஆண் : பூவில் பிறந்தது பெண் : கண்ணழகு ஆண் : பொன்னில் விளைந்தது பெண் : பெண்ணழகு ஆண் : பூவில் பிறந்தது பெண் : கண்ணழகு ஆண் : பொன்னில் விளைந்தது பெண் : பெண்ணழகு ஆண் & பெண் : ல ல ல..லா லலலல லல்லல்ல லா லலலல லல்லல்ல லா லலலல லல்லல்ல லா லலலல லல்லல்ல லா லலலல லல்லல்ல லா *****
2. போகப் போக தெரியும் படம் : சர்வர் சுந்தரம் (1964) பாடியவர்கள் : பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா இசை : எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் வீடியோ இந்தப் பூவின் வாசம் புரியும் பெண் : போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் பெண் : போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஆண் : கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன ஆண் : பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன பெண் : போகப் போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் பெண் : போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் பெண் : பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் பெண் : என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும் பயணம் வாராமல் இருப்பதென்ன என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும் பயணம் வாராமல் இருப்பதென்ன ஆண் : காலம் நேரம் பிறக்கும் நம் காதல் கதவுகள் திறக்கும் நம் கண்கள் அப்போது துடிக்கும் உன் கன்னம் எப்போது சிவக்கும் பெண் : போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஆண் & பெண்: ஆ ஹ ஹஹ ஹாஹா ஒஹோஹோ ஒஹோ ஓஹோஹோ *****
|