கர்ணன்

karnan
நடிப்பு
சிவாஜி கணேசன், என்.டி. ராமராவ், சாவித்திரி, தேவிகா, எம்.வி. ராஜம்மா, எஸ்.ஏ. அசோகன், ஆர். முத்துராமன், ஓ.ஏ.கே. தேவர், வி.எஸ். ராகவன், ஷோபன் பாபு

இசை
எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி

பாடல்கள்
கண்ணதாசன்

படத்தொகுப்பு
ஆர்.தேவராஜன்

ஒளிப்பதிவு
வி. ராமமூர்த்தி

திரைக்கதை
ஏ.எஸ். நாகராஜன், சக்தி டி.கே. கிருஷ்ணசாமி

இயக்கம்
பி. ஆர். பந்துலு

தயாரிப்பு
பி. ஆர். பந்துலு

தயாரிப்பு நிறுவனம்
பத்மினி பிக்சர்ஸ்

வெளீயீடு:
14 ஜனவரி 1964

வீடியோ


*****
பாடல்கள்
1. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

படம் : கர்ணன் (1964)
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

வீடியோ


உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

*****