பாவ மன்னிப்பு

paava mannippu
நடிப்பு
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி கணேசன், எம்.ஆர். ராதா, வி. நாகையா, டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, கொத்தமங்கலம் சுப்பு, ராமராவ், எம்.வி. ராஜம்மா, தேவிகா

இசை
எம்.எஸ். விஸ்வநாதன் & டி.கே. ராமமூர்த்தி

பாடல்கள்
கண்ணதாசன்

ஒளிப்பதிவு
G. விட்டல்ராவ்

படத்தொகுப்பு
ஏ. பீம்சிங்

கதை
புத்தா பிக்சர்ஸ் குழுவினர்

வசனம்
எம்.எஸ். சோலைமலை

திரைக்கதை, இயக்கம்
ஏ. பீம்சிங்

தயாரிப்பாளர்
ஏ. பீம்சிங், ஏ.வி. மெய்யப்பன்

தயாரிப்பு நிறுவனம்
புத்தா பிக்சர்ஸ்

வெளீயீடு:
16 மார்ச் 1961

வீடியோ


*****

பாடல்கள்
1. காலங்களில் அவள் வசந்தம்
படம் : பாவ மன்னிப்பு (1961)
பாடியவர் : பி.பி. ஸ்ரீநிவாஸ்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் & டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர் : கண்ணதாசன்

வீடியோ


காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

பறவைகளில் அவள் மணி புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

பறவைகளில் அவள் மணி புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்

*****