மந்திரி குமாரி

manthiri kumari
நடிப்பு
எம். ஜி. இராமச்சந்திரன், மாதுரி தேவி, எம். என். நம்பியார், எஸ். ஏ. நடராஜன், ஜி. சகுந்தலா

இசை
ஜி. ராமநாதன்

பாடல்கள்
கா. மு. ஷெரீப், அ. மருதகாசி

ஒளிப்பதிவு
J.G. விஜயன்

படத்தொகுப்பு
எல். பாலு

கதை
மு. கருணாநிதி

இயக்கம்
எல்லிஸ் டங்கன், டி. ஆர். சுந்தரம்

தயாரிப்பாளர்
டி. ஆர். சுந்தரம்

தயாரிப்பு நிறுவனம்
மார்டன் தியேட்டர்ஸ்

வெளீயீடு:
24 ஜூன் 1950

வீடியோ


*****

பாடல்கள்
1. வாராய் நீ வாராய்
படம் : மந்திரி குமாரி (1950)
பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி
இசை : ஜி. ராமநாதன்
இயற்றியவர் : ஏ. மருதகாசி

வீடியோ


ஆண் : வாராய் நீ வாராய்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை
நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை
நீ வாராய்

பெண் : ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே... ஏஏஏ
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே... ஏஏஏ

ஆண் : இதனிலும் ஆனந்தம்
அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
இதனிலும் ஆனந்தம்
அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
அங்கே வாராய்...

பெண் : அமைதி நிலவுதே
சாந்தம் தவழுதே.‌.. ஓஓஓ
அமைதி நிலவுதே
சாந்தம் தவழுதே
அழிவிலா மோன நிலையைத்
தூவுதே... ஏஏஏ

ஆண் : முடிவிலா மோன நிலையை நீ
முடிவிலா மோன நிலையை நீ
மலை முடியில் காணுவாய்
வாராய் வாராய்...

பெண் : ஈடில்லா அழகை
சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்

ஆண் : இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவாய் அங்கே
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவாய் அங்கே

ஆண் : வாராய் நீ வாராய்
புலியெனைத் தொடர்ந்தே
புதுமான் நீயே வாராய்

ஆண் : வாராய்...

*****