அசோக் குமார்

நடிப்பு
எம்.கே.தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், ரஞ்சன், பி.கண்ணாம்பா, டி.ஏ.மதுரம்

கதை
இளங்கோவன் (தணிகாசலம்)

இசை
பாபநாசம் சிவன்

இயக்கம்
ராஜா சந்திரசேகர்

தயாரிப்பு நிறுவனம்
மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனி

வெளியீடு
7 அக்டோபர் 1941

     அசோக் குமார், இளங்கோவன் கதை வசனத்தில், ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், ரஞ்சன், பி.கண்ணாம்பா, டி.ஏ.மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் நியூடோன் ஸ்டுடியோவில் இப்படம் தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். இப்படத்தில் மகேந்திரன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.

     போரில் வென்று வந்த தனது மகன் குணாளனை (தியாகராஜ பாகவதர்), தன் இளைய மனைவி திசியரட்சதைக்கு (கண்ணாம்பா) அறிமுகப் படுத்துகிறார் அசோகர் (வி. நாகையா). குணாளனுக்கு விரைவில் யுவராஜ பட்டாபிசேகம் செய்ய எண்ணுகிறார்.

     இச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் (டி. வி. குமுதினி) சொல்கிறான் குணாளன். அதை மறைந்திருந்து கேட்கிறாள் திசியரட்சதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்).பட்டாபிசேகத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆயினும் குணாளனின் பட்டாபிசேகம் நடக்கிறது.

     பட்டாபிசேகத்தின் போது, திசியரட்சதை குணாளன் நெற்றியில் திலகமிடுகிறாள். தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொள்கிறாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் பாடும் காதல் பாட்டு திசியரட்சதையின் காமத்தீயை கிளறுகிறது.

     தந்தையின் விருப்பப்படி மறுநாள் குணாளன் திசியரட்சதையின் முன் பாடுகிறான். அப்போது, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க வெளியே செல்கிறார். தனித்து விடப்படும் இளையராணி, குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டுகிறாள். குணாளன் மறுக்கிறான். இதனால் அசோகர் வந்ததும், குணாளன் மீது வீண் பழி சுமத்துகிறாள் திசியரட்சதை. குணாளன் நாடு கடத்தப் படுகிறான். குணாளனின் இரு கண்களும் பிடுங்கப்படுகின்றன. கர்ப்பவதியான காஞ்சனமாலாவும் துரத்தப்படுகிறாள்.

     குணாளனும், காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்திக்கிறார்கள். காஞ்சனமாலைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தையுடன் ஊரூராக பிச்சையெடுக்கிறார்கள். திடீரென்று ஒருநாள் குழந்தை இறந்து விடுகின்றது.

     மகனின் பிரிவால் மன்னர் அசோகரின் உடல் நலம் குன்றுகிறது. மருத்துவர் சொற்படி, சுவர்ணகிரியில் திசியரட்சதையுடன் வந்து தங்குகிறார் அசோகர். அப்போது பாட்டுப்பாடி பிச்சையெடுக்கும் குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உண்மை அறிகிறார் அரசர். திசியரட்சதை நஞ்சருந்தி உயிர் துறக்கிறாள். புத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் புத்தரின் சந்நிதானத்தில் குணாளன் கண்கள் இரண்டையும் பெற, அனைவரும் சுகமாக வாழ்கிறார்கள்.

     இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார்.புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021