மாயா மச்சீந்திரா

maya machhindra
நடிப்பு
எம்.கே.ராதா, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்ரபாணி, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எம்.ராதாபாய், டி.ஏ.மதுரம், சாரதா வெங்கடாசலம், எம்.எஸ்.சரோஜா

இசை
பாபநாசம் சிவன்

இயக்கம்
ராஜா சந்திரசேகர்

தயாரிப்பு நிறுவனம்
மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ்

வெளியீடு
22 ஏப்ரல் 1939

     மாயா மச்சீந்திரா, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில்எம்.கே.ராதா, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.சக்ரபாணி, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எம்.ராதாபாய், டி.ஏ.மதுரம், சாரதா வெங்கடாசலம், எம்.எஸ்.சரோஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

     இந்தியா மற்றும் திபெத் மந்திரவாதிகள் மத்தியில் மாயா மச்சீந்திரா மிகவும் பிரபலம். அவரைப் பற்றிய படங்கள் பல மொழிகளில் அக்காலக்கட்டத்தில் வெளிவந்தது. முதலில் 1932ல் ஹிந்தி மற்றும் மராத்தி மொழியில் இப்படம் வெளியானது.