தட்சயக்ஞம்

நடிப்பு
வி.ஏ.செல்லப்பா, சி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.நடராஜ பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், கே.கே.பெருமாள், எம்.எம்.ராதாபாய், கே.ஆர்.ஜெயலட்சுமி, டி.ஏ.மதுரம், டி.என்.சந்திராம்மாள்

கதை
ராஜா சந்திரசேகர்

இசை
என்.எஸ்.பாலகிருஷ்ணன்

இயக்கம்
ராஜா சந்திரசேகர்

தயாரிப்பு நிறுவனம்
மெட்ரோபலிடன் பிக்சர்ஸ்

வெளியீடு
31 மார்ச் 1938

     தட்சயக்ஞம், ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வி.ஏ.செல்லப்பா, சி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.நடராஜ பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், கே.கே.பெருமாள், எம்.எம்.ராதாபாய், கே.ஆர்.ஜெயலட்சுமி, டி.ஏ.மதுரம், டி.என்.சந்திராம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தட்சயக்ஞம் என்ற பெயரில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அவற்றில் இப்படம் தான் முதல் பேசும் படமாகும்.

     பிரம்மன் வழி வந்த தட்சணின் மகளான சதி, தன் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக, சிவபெருமானை (வி.ஏ.செல்லப்பா) திருமணம் செய்கிறார். இதனால் சிவனை அவமானப்படுத்த யாகம் செய்யும் தட்சன், அனைத்து கடவுள்களையும் அழைக்கிறார். ஆனால் சிவபெருமானை மட்டும் அழைப்பதில்லை. அந்த யாகத்தில் கலந்து கொள்ள கணவன் சிவனின் விருப்பத்திற்கு மாறாக வருகிறார் சதி. ஆனால் சதியை அவள் தந்தை அவமானப்படுத்துகிறார். அவமானம் தாங்காத சதி தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். வீரபத்ரர் மூலமாக சிவபெருமான், தட்சனின் யாகத்தை தடுத்து, அவன் தலையை வெட்டி, ஆட்டுத் தலையை அவ்விடத்தில் பொருத்தச் செய்கிறார். பின்னர் சிவபெருமான் சதியின் உடல் முன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதனால் உலகம் அழியும் நிலை ஏற்படுகிறது. அப்போது பிற கடவுள்கள் அங்கு தோன்றுகின்றனர். விஷ்ணுவின் சக்கரம், சதியின் உடலை பல பாகங்களாக வெட்டுகிறது. அவை இந்தியாவின் பல பகுதிகளில் விழுந்து சக்தி பீடங்களாக மாறுகின்றன. இது தான் இப்படத்தின் கதை.