பட்டினத்தார் நடிப்பு
எம்.எம். தண்டபாணிதேசிகர், டி.ஆர். முத்துலட்சுமி, வி.என். சுந்தரம், பி.ஜி. வெங்கடேசன்கதை
டி.சி. வடிவேலு நாயக்கர்கலை
ஏ. கே. சேகர்ஒளிப்பதிவு
கே. ராம்நாத்இயக்கம்
முருகதாசா (முத்துசாமி ஐயர்)தயாரிப்பு
வேல் பிக்சர்ஸ் எம். டி. ராஜன்வெளியீடு
1936தமிழ் திரையுலகில் பட்டினத்தார் என்ற பெயரில் 3 படங்கள் 1935, 1936 மற்றும் 1962ல் வெளியாகி உள்ளன. 1935ல் லோட்டஸ் நிறுவனம் தயாரித்த பட்டினத்தார் படத்தில் சி.எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக நடித்திருந்தார். அவர் பாடல்கள் பாடுவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாலும் தண்டபாணி தேசிகருக்கு இணையாக பாட முடியவில்லை. அதனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. 1962ம் ஆண்டு வெளிவந்த படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பட்டினத்தாராக நடித்திருந்தார். இம்மூன்று படங்களில் 1936ல் தயாரிக்கப்பட்ட பட்டினத்தார் படம் தான் 25 வாரங்கள் ஓடிய மாபெரும் வெற்றிப் படமாகும். இப்படத்தில் மொத்தம் 52 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ் இசை காவலரும், புகழ்பெற்ற இசைவித்வானுமான எம்.எம். தண்டபாணி தேசிகர் பட்டினத்தாராக நடித்திருந்தார். இப்படத்தில் பெரும்பாலான பாடல்களை அவரே இசையமைத்து பாடியுள்ளார். அவர் மிகவும் கஷ்டப்பட்டு மிகச் சிறப்பாகவே நடித்திருந்தாலும், அந்த காலத்தில் அவர் உடல் பருமனாக இருந்தது, வாழ்நாள் முழுவதும் ஒரு வேளை மட்டுமே உண்டு வாழ்ந்த துறவி வேடத்திற்கு சற்றும் பொருத்தமில்லாததாக கருதப்பட்டது. இருந்தாலும் இந்தப் படத்தின் தாக்கத்தால் அந்த காலத்தில் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களும், திருமாணமானவர்களும், சந்நியாசிகள் போல் உடையும், சிகை அலங்காரமும், திருநீறும் அணிந்து கொண்டு உலவினர். தற்சமயம் இப்படத்தின் ஒரு பிரதி கூட இல்லாதது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். |
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|