|
|
இரு சகோதரர்கள் ![]() நடிப்பு
கே.பி.கேசவன், டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ராமச்சந்திரன், கே.கே.பெருமாள், எம்.ஜி.சக்ரபாணி, எம்.எம்.ராதாபாய், டி.எஸ்.கிருஷ்ணவேணி, எஸ்.என்.கண்ணா மணி, எஸ்.என்.விஜயலட்சுமிகதை
‘பாலபாரதி’ ச.து.சு. யோகிஇசை
அனந்தராமன் கோபாலசுவாமிஇயக்கம்
எல்லிஸ் ஆர். டங்கன்தயாரிப்பு
பரமேஸ்வரன் செட்டியார்தயாரிப்பு நிறுவனம்
கோயமுத்தூர் பரமேஸ்வர் சவுண்ட் பிக்சர்ஸ்வெளியீடு
1936விஜயகுமாரும், சுகுமாரும் (கே.பி.கேசவன்) சகோதரர்கள். இளைய சகோதரனான சுகுமார் ஒரு நடிகர். அவர் சென்னைக்கு பொருளீட்ட செல்கிறார். அங்கு அவர் பிரபலமாகிறார். அவர் அங்கிருந்து அனுப்பும் பணத்தை விஜயகுமாரும் அவர் மனைவியும் மறைத்து வைத்துக் கொண்டு குடும்பத்தை தவிக்க விடுகிறார்கள். அவர்களின் பேராசையால் கூட்டுக் குடும்பம் பிரிகிறது. இறுதியில் பேராசைக்காரர்களான சகோதரனும், அவன் மனைவியும் மனம் திருந்தி மன்னிப்பு கோருகிறார்கள். மீண்டும் குடும்பம் ஒன்றாக இணைகிறது. இது தான் இப்படத்தின் கதை. சதி லீலாவதி திரைப்படத்திற்குப் பிறகு எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய இரண்டாவது படம் இது. பம்பாய் சரோஜ் மூவி டோன் ஸ்டூடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தில் எம்.ஜி.ஆர் போலீஸ்காரராக தம்முடைய சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் நடித்துள்ளார். அலமேலு அம்மாள் என்ற 70 வயது மூதாட்டியை இப்படத்தில் பாட்டியாகவே இயல்பாக நடிக்கவைத்துள்ளார் டங்கன். இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த போது வெளிவந்த படம் இது. போராட்டங்கள், கை ராட்டினத்தில் நூல் நூற்பது, அன்னியப் பொருட்கள் மறுப்பு ஆகியவற்றை அப்போது அரசு தடை செய்திருந்தது. குடும்ப ஒற்றுமையின் மூலம் தேச ஒற்றுமை, மதுவிலக்குப் பரப்புரை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை இப்படம் முன்னிறுத்தியது. |