|
|
விஜய் சேதுபதி ![]() விஜய குருநாத சேதுபதி ஜனவரி 16, 1978 அன்று பிறந்தார், சிறுவயதில் ராஜபாளையத்தில் வளர்ந்த இவர். பின்னர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இவரது குடும்பம் வட சென்னையில் உள்ள எண்ணூருக்கு இடம் பெயர்ந்தது. கோடம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மேல்நிலைப் பள்ளியிலும், லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியிலும் பயின்றார். பள்ளியில் இவர் சராசரி மாணவராகத் திகழ்ந்தார். இவரது 16வது வயதில், நம்மவர் (1994) படத்தில் ஒரு பாத்திரமாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரது குறுகிய உயரம் காரணமாக நிராகரிக்கப்பட்டார். துவக்க காலத்தில் இவர் சில்லறை விற்பனை கடையில் விற்பனையாளராகவும், துரித உணவு கூட்டு நிறுவனத்தில் காசாளர் மற்றும் தொலைபேசி பூத் ஆபரேட்டராகவும் பணி புரிந்தார். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் பெய்டு ஜெயின் கல்லூரியில் (பி.காம்) வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் ஒரு சிமென்ட் தொழில் நிறுவனத்தில் கணக்கு உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் அவர் இந்தியாவில் சம்பாதித்ததை விட நான்கு மடங்கு சம்பளம் கிடைக்கும் என்பதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு ஒரு கணக்காளராக வேலைக்குச் சென்றார். துபாயில் இருந்தபோது, அவர் தனது வருங்கால மனைவி ஜெஸ்ஸியை ஆன்லைனில் சந்தித்தார். 2003ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அதே2003 இல் அவர் இந்தியா திரும்பினார். பின்னர் அவர் உள் அலங்காரத் தொழிலில் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் ஆயத்த சமையலறைகளைக் கையாளும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் அவர் சென்னையைச் சேர்ந்த நாடகக் குழுவான கூத்துப் பட்டரையில் கணக்காளராகவும் நடிகராகவும் சேர்ந்தார். இதையடுத்து அவர் பின்னணி நடிகராகவும், ஒரு சில படங்களில் முன்னணி கதாபாத்திரத்தின் நண்பராகவும் நடித்தார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார். இயக்குநர் செல்வராகவனின் புதுப்பேட்டை(2006) படத்தில் தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்பு பிரபு சாலமனின் லீ (2007) திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு (2009), நான் மகான் அல்ல (2010) ஆகிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து 2010ல் தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகாட என்பதின் தமிழ் பதிப்பில் நாயகனாகவும், அதன் கன்னட பதிப்பில் எதிர் நாயகனாகவும் (வில்லன்) நடித்தார். எனினும் இப்படம் திரைக்கு வரவில்லை. இயக்குனர் சீனு ராமசாமியின் நாடகத் திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று (2010) முதன் முதலாக நாயகன் வேடத்தில் நடித்தார். அந்த படம் அந்த ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. திரைப்படங்கள் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004) புதுப்பேட்டை (2006) லீ (2009) வெண்ணிலா கபடிக் குழு (2009) நான் மகான் அல்ல (2010) பலே பாண்டியா (2010) தென்மேற்கு பருவக்காற்று (2010) வர்ணம் (2011) சுந்தர பாண்டியன் (2012) பீட்சா (2012) நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) சூது கவ்வும் (2013) இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) ரம்மி (2014) பண்ணையாரும் பத்மினியும் (2014) ஜிகர்தண்டா (2014) கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) திருடன் போலீஸ் (2014) எடக்கு (2014) வன்மம் (2014) பெஞ்ச் டாக்கீஸ் (2015) புறம்போக்கு என்கிற பொதுவுடைமை (2015) ஆரஞ்சு மிட்டாய் (2015) நானும் ரவுடிதான் (2015) சேதுபதி (2016) காதலும் கடந்து போகும் (2016) இறைவி (2016) தர்ம துரை (2016) ஆண்டவன் கட்டளை (2016) றெக்க (2016) கவண் (2017) விக்ரம் வேதா (2017) புரியாத புதிர் (2017) கதாநாயகன் (2017) கருப்பன் (2017) ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் (2018) டிராஃபிக் ராமசாமி (2018) ஜுங்கா (2018) இமைக்காத நொடிகள் (2018) செக்கச் சிவந்த வானம் (2018) 96 (2018) சீதக்காதி (2018) பேட்ட (2019) சூப்பர் டீலக்ஸ் (2019) சிந்துபாத் (2019) மார்கோனி மத்தாய் (2019) சாய் ரா நரசிம்ம ரெட்டி (2019) (தெலுங்கு) சங்கத்தமிழன் (2019) ஓ மை கடவுளே (2020) கா பே ரணசிங்கம் (2020) மாஸ்டர் (2021) உப்பென (2021) லாபம் (2021) துக்ளக் தர்பார் (2021) அனபெல்லே சேதுபதி (2021) முகிழ் (2021) விடுதலை பாகம் 1 (2021) கடைசி விவசாயி (2022) காத்து வாக்குல ரெண்டு காதல் (2022) விக்ரம் (2022) மாமனிதன் (2022) 19 (2022) (மலையாளம்) டிஎஸ்பி (2022) ஜவான் (2023) (இந்தி) காந்தி டாக்ஸ் (2023) மெர்ரி கிறிஸ்துமஸ் (2024) மகாராஜா (2024) விடுதலை பாகம் 2 (2024) ஏஸ் (2025) தலைவன் தலைவி (2025) திரைப்படங்களில் பிற நிலைகள் ஆரஞ்சு மிட்டாய் (2015) - தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் ஹலோ நான் பேய் பேசறேன் (2016) - பின்னணி பாடகர் கட்டாப்பாவ காணோம் (2017) - கதை கூறுபவர் இப்படை வெல்லும் (2017) - கதாசிரியர் ஜுங்கா (2018) - தயாரிப்பாளர் மேற்குத் தொடர்ச்சி மலை - தயாரிப்பாளர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் (2019) - பின்னணிப் பாடகர் அண்டாவ காணோம் - (2019) - கதை கூறுபவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண் (2006) நம்ம ஊரு ஹீரோ (2019) மாஸ்டர் செஃப் தமிழ் (2021) பிக் பாஸ் தமிழ் (2024 - 2025) இசைக் காணொளிகள் மச்சான் மச்சான் (2013) டீ போடு (2015) ஸ்பிரிட் ஆஃப் சென்னை (2016) மாற்றங்கள் ஒன்றே தான் (2017) |