TamilThiraiUlagam.com - தமிழ்திரைஉலகம்.காம் - News - செய்திகள் - சாமி 2- விலகியது ஏன்? த்ரிஷா விளக்கம்
tamilthiraiulagam.com

twitter
facebook
9176888688

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 552  
புதிய உறுப்பினர்:
M.Elangovan, V.Arunachalam
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
ஆளுநர் பாதுகாப்பு கார் மோதி இருவர் பலி
திருவண்ணாமலை:ஆசிரம சுவர் இடிந்து பலி 2
கார் விபத்து : ரஹானேவின் தந்தை கைது
ஈராக்கில் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு
டிச.18 ல் சேலம் செல்கிறார் கவர்னர்
சினிமா செய்திகள்
பொன்வண்ணன் ராஜினாமா வாபஸ்
ரஜினி பிறந்தநாள் : காலா போஸ்டர் வெளியீடு
செய்திகள்

சாமி 2- விலகியது ஏன்? த்ரிஷா விளக்கம்
சென்னை: விக்ரம், த்ரிஷா, விவேக் ஆகியோர் நடித்த 'சாமி' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தை ஹரி இயக்கி இருந்தார்.

     தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் விக்ரம், த்ரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார். அதனால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா நடிப்பதாக இருந்தது. இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு அட்வான்ஸ் வாங்கினார் த்ரிஷா. படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டார் நடிகை த்ரிஷா. சாமி படத்திலிருந்து வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது.

     சாமி 2' படத்தில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு அதிக முக்கியத்தும் இருப்பதாலும், தனக்கு ஒரு சில காட்சிகளே இருப்பதாலும் த்ரிஷா விலகிக் கொண்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக 'சாமி 2' படத்தின் தயாரிப்பளார் ஷிபு தமீம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாருக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிகை த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தது. தற்போது தனது விளக்கத்தை த்ரிஷா தயாரிப்பாளர் சங்கத்தில் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளார்.

     “படத்தில் நான் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அதனால் படத்திலிருந்து விலகிக்கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன். எனது சொந்தக் காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி இருக்கிறேன்" என்று த்ரிஷா கொடுத்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

     த்ரிஷாவை சமாதானப்படுத்தி நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இருப்பினும் தயாரிப்பாளர் புகாரால் த்ரிஷா 'சாமி 2' படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு மிகவும் குறைவே!

கடைசியாக திருத்தப்பட்டது: நவம்பர் 28, 2017 17:53 IST


பிற செய்திகள்
பொன்வண்ணன் ராஜினாமா வாபஸ்
ரஜினி பிறந்தநாள் : காலா போஸ்டர் வெளியீடு

1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017


1861 | 1862 | 1863 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 2017

உங்கள் கருத்துக்கள்