விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 15, 2019, 06:30 [IST]

ஐதராபாத் : வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’ என்னும் ஒரு படத்தில் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு நடிகரான இவர், அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பின் ‘நோட்டா’ என்னும் தமிழ் படத்தில் நடித்தார்.

‘கீதா கோவிந்தம்', ‘டியர் காம்ரேட்’ என வெற்றி படங்களில் நடித்தார் விஜய். இதில் டியர் காம்ரேட் படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் வெளியானது.

அர்ஜுன் ரெட்டி படம் ஹிந்தியில் சாஹித் கபூர் நடிப்பில் ‘கபீர் சிங்' என ரீமேக் செய்யப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் ஹிட்டானது.

இந்நிலையில் தனது அடுத்த படம் ‘World Famous Lover’ என பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு படம் தான் என்ற அறிவிப்பை வெளியிட்டார் விஜய். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ‘அயோக்யா’ பட நாயகி ராக்‌ஷி கண்ணா, ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரின் தெரேசா, இசபெல்லா லெய்தி ஆகியோர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. விஜய் தேவரகொண்டா சீனய்யா என்ற லவ்வர் பாய் கேரக்டரில் நடிக்கிறார். இதில் சுவர்ணா என்ற கேரக்டரில் ஐஸ்வர்யா அவருக்கு மனைவியாக நடிக்கிறார். இந்த போஸ்டருக்கு தெலுங்கு திரையுலகில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, நம்ம வீட்டு பிள்ளை உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.

பிற செய்திகள்
ஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்
தோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது
முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்!
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்!
ராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று
ஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு
மும்பையில் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் காலமானார்







1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020