கணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது!

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 02, 2019, 17:35 [IST]

சென்னை: மனைவியை தாக்கிய வழக்கில் பிரபல சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

வம்சம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடிகையாகவும், சின்னத்திரையில் நடன இயக்குனராகவும், பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ. கல்யாணப் பரிசு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் இவர்கள் திருவான்மியூர் எல்.பி.சாலையில் வசித்து வருகின்றனர்.

ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்கள் சிலவற்றை அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை ஈஸ்வர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஈஸ்வரால் கடனை திருப்பிச் செலுத்தி, அடகு வைத்த பத்திரத்தை மீட்க முடியாத நிலை இருந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பிரச்சினை முற்றி, இருவருக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

அப்போது, ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரித்த போலீசார், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை கைது செய்தனர். 54 வயதாகும் சந்திராவை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். ஈஸ்வர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்வர் அடித்ததால் காயமடைந்த ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பிற செய்திகள்
அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்
தோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது
முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்!
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்!
ராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று
ஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு
மும்பையில் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் காலமானார்
மாற்றுத் திறனாளிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதியுதவி



புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
ஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
என்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)
தம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)
இதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)
வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)
தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)
காதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
தோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)
நிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)
நேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)
லில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)




1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020