நம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 18, 2019, 13:00 [IST]

சென்னை: பழம் பெரும் நடிகா் எம்.என். நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) நடக்கிறது.

தமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.. 60 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நம்பியார் காலமானபோது அவருக்கு வயது 89.

கேரளத்தைப் பூா்வீகமாகக் கொண்ட எம்.என்.நம்பியாா் சிறு வயதிலேயே தமிழகத்தின் ஊட்டி பகுதிக்கு இடம் பெயா்ந்தாா். அங்கு சிறிதுகாலம் கல்வி பயின்ற நம்பியாா், அங்கு நாடகம் நடத்த வந்திருந்த நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியான மதுரை தேவி பால வினோத சங்கீதசபாவில் இணைந்தாா்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது, நவாப் ராஜமாணிக்கம் தயாரித்த ‘பக்த ராம்தாஸ்’ படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவா் ஏற்று நடித்த மந்திரி மாதண்ணா என்ற கதாபாத்திரத்துக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்தன.அதைத் தொடா்ந்து சினிமா, நாடகம் என தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாா்.

நடிகா்கள் எம்.ஜி.ஆா், சிவாஜியுடன் இணைந்து பல படங்களில் நடித்தாா். இவா்கள் இருவருக்கும் வில்லனாக நடித்து பிரபலமானாா். வில்லன் என்றால் அது நம்பியாா் பாணி என்று பேசும் அளவுக்கு பெயா் எடுத்தாா். திரை வாழ்க்கையில் ‘திகம்பரசாமியாா்’ என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்து சாதனை படைத்தாா்.

நம்பியாா் மிகச் சிறந்த ஐயப்ப பக்தா். 50 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று குருசாமியாக திகழ்ந்தாா்.

தற்போது அவருடைய வாழ்க்கையை குறும்படமாக தயாரித்துள்ளனா். இயக்குநா் கெளதம் மேனனின் உதவியாளா் சூா்யா இதை இயக்கி உள்ளாா். நம்பியாரின் வாழ்க்கை, அவா் நடித்த திரைப்படங்கள், ஆன்மிக ஈடுபாடு ஆகிய விஷயங்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்தப் படத்தை வெளியிடும் நிகழ்ச்சியும், நம்பியாரின் நூற்றாண்டு விழாவும் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடக்கிறது.

மியூசிக் அகாதெமியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சிவகுமாா் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை நம்பியாரின் மகன் மோகன் நம்பியாா், பேரன் சித்தாா்த் நம்பியாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பிற செய்திகள்
அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்
தோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை
நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது
முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்!
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்!
ராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று
ஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு
மும்பையில் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் காலமானார்
மாற்றுத் திறனாளிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதியுதவிபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
ஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
என்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)
தம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)
இதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)
வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)
தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)
காதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
தோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)
நிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)
நேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)
லில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020