திரைப்பட இணைய இதழ்
  


201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 01, 2019, 09:15 [IST]

சென்னை: கடந்த 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 1,079 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2010 மே மாதம் நடந்த விழாவில் அனுஷ்கா, தமன்னா, ஆர்யா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட 26 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது 2011- ஆம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படுகின்றது. நகைச்சுவை நடிகர் பாண்டு, திரைப்பட நடிகை குட்டி பத்மினி, நடிகர்கள் ராஜசேகர், ராஜிவ், நாடக நகைச்சுவை நடிகர் வெங்கட்ராமன், இயற்றமிழ் பிரிவில் சங்கரசுப்பிரமணியன், வில்லிசையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த இராஜகிளி விருது பெறுபவர்களின் முக்கியமானவர்கள்.

2012ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படுகின்றது. ஆன்மீக இசை சொற்பொழிவாளர் உடையளூர் கே.கல்யாணராமன், திரைப்பட நடிகை ராஜஸ்ரீ, டி.ஆர்.வரலட்சுமி, கானா பாடல் கலைஞர் உலகநாதன், திரைப்பட இயக்குனர் சித்ரா லட்சுமணன், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் முக்கியமானவர்கள்.

2013ம் ஆண்டுக்கு கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பெயர் பட்டியலில் திரைப்பட நடிகர் பிரசன்னா, நடிகைகள் நளினி, காஞ்சனா தேவி, சாரதா, நடிகர்கள் பாண்டியராஜன், டிபி கஜேந்திரன், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உள்ளிட்ட 19 பேர் அடங்குவர்.

2014ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவோர் மொத்தம் 20 பேர். அதில் திரைப்பட நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன் திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, மூத்த பத்திரிக்கையாளர் நியூஸ் ஆனந்தன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

2015ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்களின் பெயர் பட்டியலில் 20 பேர் இடம் பெற்றுள்ளனர். நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு ஆகியோரும் முக்கியமானவர்கள்.

2016ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியலில் திரைப்பட நடிகர் சசிகுமார், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, சூரி , பத்திரிகையாளர் நெல்லை சுந்தரராஜன், சமய சொற்பொழிவாளர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

2017ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் மொத்தம் 28. அதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இயல் பிரிவில் புலவர் புலமைப்பித்தா, கவிஞர் சுப்பு ஆறுமுகம், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது வழங்கப்படுகிறது.

இசை பிரிவில் எஸ்.ஜானகி, லலிதா, சரோஜா, டி.வி.கோபாலகிருஷ்ணன், சசிரேகா, மாலதி, உன்னி மேனன் ஆகியோருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது.

பரதநாட்டியம் பிரிவில் வைஜெயந்திமாலா பாலி, சி.வி.சந்திரசேகரன், வி.பி.தனஞ்செயன் ஆகியோருக்கு பாலசரஸ்வதி விருது வழங்கப்பட உள்ளது.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.500.00
Buy

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.239.00
Buy

மருந்தில்லா மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.194.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)