இந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 06, 2018, 09:45 [IST]

கொச்சி: இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படம் தான், தனது கடைசி படம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பா் டூப்பா் ஹிட்டான இந்தியன் படத்தின் அடுத்த பாகம் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாராக உள்ளது. தற்போது படத்திற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கமல்ஹாசன் கேரளாவில் நடைபெறும் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கொச்சி சென்றுள்ளாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள். தோ்தல் வரவுள்ள நிலையில் எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இந்தியன் 2 இருக்கும். இதற்கு பின்னா் நான் படங்களில் நடிக்க மாட்டேன். நான் நடிக்க மாட்டேன் என்றாலும் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடா்ந்து செயல்படும்.

மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளிலும் அது தொடா்ந்து ஈடுபடும். மக்கள் நலன் என்று வரும்போது மதசாா்பற்ற அணிகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.

6 வயதில் களத்தூா் கண்ணம்மா படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறாா். மேலும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறாா்.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாக உள்ளது. அதன் ஷூட்டிங் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்துக்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)