திரைப்பட இணைய இதழ்
  

அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888


எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 02, 2018, 16:45 [IST]

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து நடிகர் பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய நடித்துள்ள சர்கார் படம் தொடர்பான கதை திருட்டு பிரச்னையில் எழுத்தாளர் சங்க தலைவராக திறம்பட செயல்பட்டு செங்கோல் பட கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் பாக்யராஜ், திடீரென எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஏகோபித்த ஒப்புதலோடு என்னை சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் நானும் மகிழ்ச்சியாக பொறுப்பு ஏற்று, மனசாட்சியோடு, நேர்மையாக செயல்படுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். எல்லாம் நல்லபடியாக சென்றது.

சர்கார் பட விவகாரத்தில் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டியதிருந்தது. எனக்கு நேர்ந்துள்ள அசௌகரியங்கள் மற்றும் ஒழுங்கீனங்களை நான் சங்கத்தின் நலன் கருதி வெளியே சொல்லவில்லை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்துக்கு போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இத்தனை அசௌகரியங்கள் தான் சந்திக்க நேர்ந்தது. சங்கம் தற்போது உள்ள நிலையில் தேர்தல் வேண்டுமா..? என பலரும் கேட்கலாம். ஆனால் சங்கம் சீர்கெட்டுப் போவதை விட முறையாக தேர்தலை சந்திப்பது நலம் பயக்கும் என்று திரையுலகின் நன்மை கருதி இதை கூறுகிறேன்.மீண்டும் தலைவர் பதவியில் போட்டியிட்டு முறையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று பொறுப்பை ஏற்று, தொடர்ந்து கடமை உடன் செயல்படுவேன்.

சர்கார் விவகாரத்தில் முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படாததால் வேறு வழியில்லாமல் சர்கார் பட கதையை வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் மன்னிப்பு கோருகிறேன் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

பாக்கியராஜின் பதவி விலகலை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பாக்யராஜுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவரது பதவி விலகலை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்த போது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜே தலைவராகத் தொடரவேண்டும் என அனைவரும் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்தே செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ள அவர், பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு
எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா
விஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு
பணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு
சர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்
சூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்
விஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது
காட்டேரி திரைப்பட டீசர் வெளியீடு
விஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்
பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2
இருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது
ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |


எமது இணையதளங்கள்
சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)