சூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 06, 2018, 22:30 [IST]

சென்னை: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில், மோகன்லாலின் வேடம் குறித்த விவரம் தெரியவந்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் 37-வது படத்தை, கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘சூர்யா 37’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். மோகன்லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, தற்போது வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில், உயர் பதவியிலுள்ள ஐபிஎஸ் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், மோகன்லாலின் கேரக்டர் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக சூர்யா நடிக்கிறார் என்கிறார்கள்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக ‘மதிப்பிற்குரிய பிரதமர் சந்திரகாந்த் வர்மா நம் தேசத்தின் 4கே அல்ட்ரா யுகத்தின் கம்பீரமாக திகழ்கிறார்’ என மோகன்லால் படம் உள்ள பேனர் வைக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்தப் படத்தில் நடிக்கவிருந்த தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் விலகினார். அவருக்குப் பதிலாக பாலிவுட் நடிகர் சிராக் ஜானி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜில்லா திரைப்படத்திற்குப் பிறகு மோகன்லால் இப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்கிறார்.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)