விஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 05, 2018, 20:45 [IST]

சென்னை: விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோ எனும் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கான தமிழ்நாடு திரையரங்க உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோ எனும் நிறுவனம் வாங்கியுள்ளதாக சத்யஜோதி நிறுவனம் பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா நடித்த அறம் படத்தை அடுத்து கேஜேஆர் நிறுவனம் விஸ்வாசம் படத்தின் உரிமையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அதிகாலை 3.40மணிக்கு வெளியாகியது. வேதாளம், விவேகம் என நகரத்து கதைகளில் நடித்து வந்த அஜித், வீரம் படத்திற்குப் பிறகு மீண்டும் விஸ்வாசம் படத்தில் முழு கிராமத்து ஆளாக நடிக்கிறார்.

அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி அவானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிட்டு பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)