திரைப்பட இணைய இதழ்
  

அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888


சங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூலை 24, 2018, 18:50 [IST]

சென்னை: எழுத்தாளர் சங்க அறக்கட்டளை ஊழல் தொடர்பாக இயக்குநர் விசு மீது, இயக்குநர் பாக்யராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக கே.பாக்யராஜ் தற்போது பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் விசு பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில் திடீரென விசு மீது கே.பாக்யராஜ் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கே.பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், சமீபமாக நாங்கள் அனைவரும் பொறுப்புக்கு வந்திருக்கிறோம். நலிந்த எழுத்தாளர்களுக்கு கல்வி தொகை, மருத்துவ உதவி வழங்கும் அறக்கட்டளை நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ள அனைவரையுமே பேச அழைத்தோம். என்னால் வரமுடியாது எனக்கு வயதாகி விட்டது. பிறைசூடன்தான் அனைத்துப் பொறுப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். பிறைசூடனிடம் பேசவும் என்று விசு கூறினார்.

பிறைசூடனிடம், ”வாருங்கள். இது குறித்து சங்கத்தில் பேச வேண்டும். சங்கத்தில் பணமில்லை அனைத்துமே அறக்கட்டளையில் இருக்கிறது” என்று சொன்னோம். அவர் சங்கம் வேறு, அறக்கட்டளை வேறு. இதற்கும் அதற்கு சம்பந்தமில்லை என்றார். சங்கத்திலிருந்து தானே பணமெடுத்து அறக்கட்டளை தொடங்கினீர்கள். பிறகு எப்படி சம்பந்தமில்லை என்று சொல்லமுடியும் என்று கேட்டோம்.

அதற்கு எழுத்தாளர் பிறைசூடன், ‘நாங்கள் கல்வி உதவித்தொகைக்கு எல்லாம் உதவி செய்ய மாட்டோம். நலிந்தோர்களுக்கு மட்டுமே செய்வோம். நாங்கள் ஒரு சில விதிமுறைகள் வைத்திருக்கிறோம். அதில் நீங்கள் தலையிட முடியாது’ என்றார். மற்றும் சங்கத்தின் அனைத்துக் கோப்புகளையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இதற்கு வேறுவழியில்லாத காரணத்தால், அந்த அறக்கட்டளையில் இருந்த செயலாளர் பிறைசூடன், தலைவர் விசு உள்ளிட்டோர் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம்’’ என்றார் பாக்யராஜ்.

நடிகர், இயக்குநர், தொகுப்பாளர், எழுத்தாளர் என திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விசு மீது திடீரென குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசு தற்போது வயது மூப்பு காரணமாக திரையுலகை விட்டு விலகி இருக்கிறார்.

பிற செய்திகள்
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு
எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா
விஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு
பணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு
சர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்
சூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்
விஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது
காட்டேரி திரைப்பட டீசர் வெளியீடு
விஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்
பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்
அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2
இருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது
ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |


எமது இணையதளங்கள்




ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)