சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 08, 2018, 06:00 [IST] ரஜினிகாந்த நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம் நேற்று (07-06-2018) வெளியானது. அப்படம் வெளியான அதே தினத்தில் தனது புதிய படத்திற்கான படப்பிடிப்பில் ரஜினிகாந்த பங்கேற்றுள்ளார். ரஜினி நடிக்கும் அந்த புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நேற்று டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பில் கார்த்திக் சுப்புராஜ், ரஜினிகாந்த மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இப்படத்தில் முதல்முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888 |
|
|