ஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 06, 2018, 08:35 [IST]

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், ஜூன் 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டி.வி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த முறையும் சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் தான் வீடு செட் போடப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் இரண்டாவது சீஸன் குறித்த விளம்பர காணொலி வரும் ஜூன் மாதம் 3 - ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பது உறுதியாகியுள்ளது. ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவதால், மக்களிடம் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீஸன் நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், உள்ளிட்ட 19 பேர் கலந்து கொண்டனர். 100 நாட்கள் தங்கியிருந்து அங்கு வைக்கப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆரவ், சினேகன் இருவரில் ஆரவ் போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)