ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 15:10 [IST] அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு இளையராஜா சென்றிருந்தார். அப்போது பங்கு பணிபுரியும் ஊழியர் இடையே பேசினார். அப்போது அவர் யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் 16 வயதில் ரமண மகரிஷிக்கு மட்டும் தான் உயிர்த்தெழுதல் நடந்துள்ளது என்று கூறினார். இந்நிலையில், கிறிஸ்துவ நல்லெண்ன இயக்கத்தின் பொதுச்செயலாளர் தயாநிதி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை ஒரு புகார் மனு அளித்தார். அதில், கிறிஸ்துவர்களின் மனதை காயப்படுத்திய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் இளையராஜாவின் வீட்டை சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் சிலர் முற்றுகையிட முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக்கட்சியினர்களை கைது செய்தனர்.
|
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) தோப்பிலொரு நாடகம் நடக்குது - கல்லுக்குள் ஈரம் (1980) குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - தெய்வம் (1972) மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி (1990) மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் (1978) செல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020) வாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020) ரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020) மீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980) |
|
|
|