உதயநிதி - தமன்னா நடித்த ‘கண்ணே கலைமானே’ படப்பிடிப்பு முடிந்தது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 15, 2018, 23:00 [IST]

சென்னை : ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘நிமிர்’ படத்தினை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், உதயநிதி ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மதுரை, வாடிப்பட்டியை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. கடந்த 10 ஆம் தேதி கொடைக்கானலில் தொடங்கிய படப்பிடிப்பு, இன்று நிறைவு பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அடுத்து அட்லீ உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018


| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |