|
|
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
காசு மேல காசு வந்து - காதலா! காதலா! (1998) |
குட் பேட் அக்லி ![]() நடிப்பு
அஜித் குமார், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் வர்மா, யோகி பாபுஒளிப்பதிவு
அபிநந்தன் இராமானுஜம்படத்தொகுப்பு
விஜய் வேலுகுட்டிஇசை
ஜி.வி. பிரகாஷ் குமார்கதை
ஆதிக் ரவிச்சந்திரன், இரவி கந்தசாமி, ஹரிஷ் மணிகண்டன்இயக்கம்
ஆதிக் ரவிச்சந்திரன்தயாரிப்பாளர்கள்
நவீன் யர்னீ, இரவி சங்கர், குல்சன் குமார், பூஷன் குமார், கிருஷ்ணன் குமார்தயாரிப்பு நிறுவனம்
மைத்ரி மூவி மேக்கர்ஸ், டீ-சீரீஸ்வெளீயீடு:
10 ஏப்ரல் 2025***** பாடல்கள்
1. வழித்துணையே
படம் : குட் பேட் அக்லி (2025) பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சஞ்சனா கலாமஞ்சே இசை : லியோன் ஜேம்ஸ் பாடலாசிரியர்கள் : விக்னேஷ்சிவன் மற்றும் கோ சேஷா வீடியோ மழையாய் வந்து விழுந்தாயே வழித்துணையே வழித்துணையே நீயே ஆண்: கண்டேன் கண்டேன் என்னுடையவளை தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை பெண்: கண்டேன் கண்டேன் என்னுடையவனை தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை ஆண்: உற்று உன்னைப் பார்கையிலே தொற்று கிடைத்த தனிமையினை கற்று தந்த காதல் வலி விட்டு போனதே ஆண்: ஊர்கூடும் நல்ல நல்ல தடங்கல்லெல்லாம் உன்னை கூட்டிக்கொண்டு கைக் கோர்த்து கொண்டு இதழ் சேர்த்து வைக்க நல்ல இடங்கள் எல்லாம் வா தேடித் தேடி போவோம் பெண்: இதழ் சேர்ந்திருக்கும் அந்த நேரத்திலே விழி மூடி நீ இருக்கும் வேலையிலே என்னென்ன வரம் வேண்டும் என்பதையே நான் வேண்டி வேண்டி கேட்பேன் ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழித்துணையே வழித்துணையே ஆண்: வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா வா ஓடி திரிவோம் வா என் துணையே வழித்துணையே நீயே ஆண்: கண்டேன் கண்டேன் என்னுடையவளை தந்தேன் தந்தேன் மிச்ச உயிரை பெண்: இந்த நேரம் இனிப்பது போல எப்போதும் இருப்பாயா உச்சபச்ச ஆசை கொண்டேனே உன்னிடத்தினிலே ஆண்: வெட்பம் குளிர் எது வந்தாலும் இதமாக இணைப்பாயா திக்கு முக்கு ஆடிப் போகின்றேன் பெண்: நீர்வீழ்ச்சி நெற்றியின் மீது நிற்காமல் பொழிவது போல உன் முத்தம் கொட்டிட வேண்டும் புருவம் தொடங்கி நுனி பாதம் வரை ஆண் மற்றும் பெண்: எங்கேயோ பிறந்த என் அன்பே எனைத் தேடி வந்ததே போதும் இனி வாழும் அத்தனை நாளும் மினுக்கும் மினு மினுக்குமே ஆண்: வானம் பார்த்து கிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே வழி துணையே வழி துணையே ஆண்: வண்ணம் சூழ்ந்த இடமெல்லாம் வா வா ஓடி திரிவோம் வா என் துணையே வழி துணையே நீயே ***** 2. ஏன்டி விட்டுப் போன
படம் : குட் பேட் அக்லி (2025) பாடியவர் : சிலம்பரசன் இசை : லியோன் ஜேம்ஸ் பாடலாசிரியர் : கோ சேஷா வீடியோ அழகான ஓவியத்தை கிழித்தாயடி சிரிப்புக்குள் காயம் வைத்து சிதைத்தாயடி விதை போட்ட கையில் வேரை சாய்த்தாயடி சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா கண்ணீர் இங்கு சிந்தி கொண்டு கேள்வி கேட்க்கிறேன் சாகும் வரையில் கூடவே இருப்பேன் என்று செய்த சத்தியமெல்லாம் வெறும் வார்த்தையா நீ போட்டது பகல் வேஷமா ஏன்டி விட்டுப் போன உன் இதயம் கல்லா என்ன ஏன்டி விட்டுப் போன நிஜமா புரியலடி ஏன்டி விட்டுப் போன நான் தனியா இங்க சாக ஏன்டி விட்டுப் போன ஐயோ வலிக்குதடி உன்னை ரசிச்ச எனக்கு இது வேணும் உன்னை நேசிச்ச எனக்கு இது வேணும் உன்னை நம்பி நான் கிடந்தேனே எனக்கு இன்னும் வேணும்டி தீயில் விழும் ஈசலை போல உன் விழியில் விழுந்தவன் நானோ உயிர் மொத்தமும் வெந்து தணிந்து காந்தலாச்சுடி உன்னைப் பிரிந்தால் அந்த உலகம் சுழலாதடி தன்னந்தனியாய் இனிமேல் நானும் உலகினில் வாழ்ந்து என்னடி எந்தன் ஆகாயத்தின் நிலவே நீதானடி உன்னை நான் தேடி நான் தேடி என் ஆயுள் தீரட்டும்டி ஏன்டி விட்டுப் போன உன் இதயம் கல்லா என்ன ஏன்டி விட்டுப் போன நிஜமா புரியலடி ஏன்டி விட்டுப் போன நான் தனியா இங்க சாக ஏன்டி விட்டுப் போன அய்யோ வலிக்குதடி ஏன்டி ஏன்டி ஏன்டி விட்டுப் போன நீ என் நெஞ்ச மண்ணுல நீயும் குழி தோண்டி பொதச்சுட்டடி ஏன்டி ஏன்டி ஏன்டி விட்டுப் போன நீ உயிர் இருந்தும் பிணத்தப் போல உன்னால மாறிட்டேன்டி ***** |