24th match - Royal Challengers Bangalore v Chennai Super Kings
ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்
திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது
சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
மஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
ராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்
நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
ஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது
சென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை
பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்
நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது
ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்
நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து
திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு
கமல்ஹாசனுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு
நடிகை ஸ்ரேயா ரஷ்ய காதலருடன் போனவாரமே ரகசிய திருமணம்
விளையாட்டை மையமாகக் கொண்ட சுசீந்திரனின் அடுத்த படம்
விஸ்வரூபம் 2 படத்திற்கு தணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது


தங்க மீன்கள்

நடிப்பு
ராம், சாதனா, ஷெல்லி கிஷோர்

பாடல்கள்
நா.முத்துக்குமார்

இசை
யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு
அர்பிந்து சாரா

திரைக்கதை, இயக்கம்
ராம்

தயாரிப்பு
கௌதம் மேனன், ரேஷ்மா கத்தாலா, வெங்கட் சோமசுந்தரம்

வெளீயீடு:
ஆகஸ்ட் 30, 2013

     மகள் மீது அதீத பாசம் கொண்ட தந்தை. மகளை அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே குறைவான சம்பளத்தில் உள்ளூரில் கிடைக்கும் ஈயம் பூசும் வேலையைச் செய்கிறார் அப்பா கல்யாணி (ராம்).

     தந்தை மீதுள்ள அளவற்ற பாசம் காரணமாக, தந்தையின் பணப் பிரச்சினைகளுக்கு தானே காரணம் என்று நினைத்து குளத்தில் மூழ்கி தங்கமீனாய் மாறவும் தயாராகும் மகள் செல்லம்மா. இந்த இருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் தான் தங்க மீன்கள்.

     தனியார் பள்ளிகளின் கட்டணக் கொடுமை, அரசுப் பள்ளிகளின் மகத்துவம், அப்பா மகள் பாசம், ஏழைத் தந்தையின் பொருளாதார நெருக்கடி, என பல சமூக பிரச்னைகளின் ஊடே பயணிக்கிறது ராமின் திரைக்கதை.

     மகளை அளவு கடந்து நேசிக்கும் தந்தை ஏன் சிகரெட் புகைக்கிறார், மகளுக்கு எல்லையில்லா சுதந்தரம் கொடுத்து சுற்றவிடுகிறார் மற்றும் 2013ல் நடக்கும் கதையில், சம்பளம் மட்டும் ஏன் 1970களுக்கானதாக இருக்கிறது போன்ற நெருடல்கள் இல்லாமல் இல்லை.

     கல்யாணியாக வரும் ராமும், செல்லம்மாவாக வரும் பேபி சாதனாவும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோருக்கு வெகு இயல்பான வேடம். உணர்ந்து நடித்திருக்கிறார்.

     அருமையான இசை, நெகிழ வைக்கும் பாடல் வரிகள், கண்களை விட்டு அகல மறுக்கும் ஒளிப்பதிவு... யுவன் சங்கர் ராஜா, நா.முத்துக்குமார் மற்றும் அரபிந்து சாரா மூவரும் மெச்சும்படி உழைத்திருக்கிறார்கள்.

     இந்த படத்திற்கு மத்திய அரசு மூன்று தேசிய விருதுகளை வழங்கியுள்ளது.

1. மாநில மொழி பிரிவில் சிறந்த தமிழ்த் திரைப்படம்
2. சாதானாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது
3. ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ பாடலுக்காக, நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது

*****
பாடல்கள்
1. ஆனந்த யாழை மீட்டுகிறாய்
படம் : தங்கமீன்கள் (2013)
பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை : யுவன் சங்கர் ராஜா
இயற்றியவர் : நா. முத்துக்குமார்

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி...

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்தே பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி - அடி
கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி!

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே,
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

அப்பா...
அதே...

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்க்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி!

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018