http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





வெடிகுண்டு முருகேசன்

நடிப்பு
பசுபதி, ஜோதிர்மயி, வடிவேலு, தீபா, கே.ஏ. குணசேகரன், டி.பி. கஜேந்திரன், நிர்மலா பெரியசாமி, வீரா, ரனீஷ்

படத்தொகுப்பு
பிரவீன் K.L., ஸ்ரீகாந்த் N.B.

கலை
ஜே.பி

பாடல்கள்
யுகபாரதி, ஏக்நாத்

நடனம்
சிவசங்கர், தினேஷ், காதல் கந்தாஸ்

ஒளிப்பதிவு
பாலபரணி

சண்டை
சூப்பர் சுப்பராயன்

இசை
தினா

எழுத்து, இயக்கம்
மூர்த்தி

தயாரிப்பு
P.S. கணேஷ், M. செந்தில்குமார்

     ராஜபாளையம் கடைத்தெருவில் கைவண்டி வைத்துக் கொண்டு ஊரில் இருக்கும் டீக்கடைகளுக்கு தண்ணீர் ஊற்றி பிழைப்பு நடத்தி வருபவர் வெடிகுண்டு முருகேசன் (பசுபதி). தன்னுடன் படித்த மனநிலை சரியில்லாத பொன்னியையும் (தீபா) தன்னுடன் வைத்துக் காப்பாற்றி வருகிறார். சின்னச் சின்ன வழக்குகளில் சிறைக்குச் சென்று வரும் முருகேசனின் நல்ல மனதைப் பார்த்து அவரை காதலிக்கிறார் போலிஸ்காரரான நாச்சியார் (ஜோதிர்மயி). இதற்கிடையில் பொன்னியை வில்லனின் தம்பி கொடஞ்சான் (ரினீஷ்) பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார். நியாயம் கேட்கும் முருகேசனை கொல்லும் முயற்சியில் செத்தும் போகிறார் கொடஞ்சான். தம்பியின் சாவுக்கு பழி வாங்கத் துடிக்கும் வில்லனிடம் இருந்து முருகேசன் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

     சரியும் தவறும் கலந்த சாதரண மனிதனாக அறிமுகமாகும் பசுபதி டீ கடைகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, நடுத்தெருவில் நின்று குடிப்பது, நீதிமன்றத்திலும் போலீஸ் ஸ்டேஷனிலும் பஞ்ச் டயலாக்குகளையும், கருத்துக்களையும் பேசுவது என வெளுத்துக்கட்டுகிறார் மனிதர். மனநிலை சரியில்லாத பெண்ணைக் காப்பாற்றும் காட்சியில் உருக வைக்கிறார். நகைச்சுவை காட்சிகளில் பின்னி எடுக்கிறார்.

     போலீஸ வேலைக்கு போகப் பிடிக்காமல் பொசுக் பொசுக்கென்று அழுபவராக ஜோதிர்மயி. அழுகை, சிரிப்பு, டூயட் என எல்லாவற்றையும் சரிவர செய்திருக்கிறார்.

     அலர்ட் ஆறுமுகமாக வரும் வடிவேலு ஆரம்பத்தில் ஏனோதானோவென துவங்கினாலும் முடிவில் வெளுத்துக்கட்டுகிறார். போலீஸ இன்ஸ்பெக்டரின் பேண்டுக்குள் கையை விட்டு மாட்டிக் கொள்ளும் காட்சியில் தியேட்டர் குலுங்குகிறது. ஆனால், ஒரே ஒருகாட்சியில் மட்டும் தான் பசுபதியும் வடிவேலுவும் சந்திக்கிறார்கள். வடிவேலுவின் காட்சிகளை மட்டும் தனியாக எடுத்துச் சேர்த்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

     பொன்னி என்னும் மனநிலை சரியில்லாத பெண்ணாக நடித்து இருக்கும் தீபா கொடுத்த வேலையை சரியாகச் செய்து இருக்கிறார். செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி நீதிபதியாக நடித்து இருக்கிறார். இனி பல படங்களில் இவரைப் பார்க்கலாம். வில்லன்கள் வீரா, ரனீஷ் இருவருமே இது ஒரு காமெடி படம் என்பதைப் புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள்.

     தினாவின் இசையில் சாரலே பாட்டு மட்டும் பரவாயில்லை. பின்னணி இசை தான் காதை கிழிக்கிறது.

     படத்தில் வசனங்கள் அருமை. பல நல்ல விஷயங்களை சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள். உதாரணமாக கடைக்கு வந்த சிறுமியை சணல் வாங்க அனுப்பிய கடைக்காரரை சிறுமியின் அப்பா கடிந்து கொள்ளும் போது முருகேசன் சொல்லும் அறிவுரைக்கு தியேட்டரில் எழும் கைதட்டல் இதற்கு சாட்சி. வசனம் எழுதி இயக்கி இருக்கும் மூர்த்திக்கு ஒரு சபாஷ்.

     நல்ல நடிகர் தேர்வு, நறுக்கான வசனங்கள், முழுக்க முழுக்க காமெடி என தற்போதைய படங்களில் சிறந்த பொழுதுபோக்குப் படமாக திகழ்கிறது 'வெடிகுண்டு முருகேசன்' படம்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2009/vedigundumurugesan.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs