http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





நான் கடவுள்

... தொடர்ச்சி ...

     அகோரி சன்யாசிகளைப் பற்றியும், பிச்சைக்காரர்களின் வாழ்வு பற்றியும் மிக ஆழமாகச் சிந்திக்க வைத்திருப்பது இந்தப் படத்தின் வெற்றி. பிச்சைக்காரர்களைக் கேலிப் பொருளாக்காமல், அவர்களது உலகை யதார்த்தமாகக் காண்பிக்கிறது. உண்மையான பிச்சைக்காரர்களையே கொண்டு, எந்தவித சமரசங்களும் செய்யாமல் காண்பிக்க முயன்றது இந்தப் படத்தின் வலு.

     இந்தியா போன்ற வறுமை நிறைந்த நாட்டில், உடல் ஊனமுற்றோரும், மன நோயாளிகளும் ஆதரவற்றோரும் வேறு எந்த நாட்டையும்விட அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் எந்த விதமான அரசாங்க உதவியும் அவர்களைக் காக்க முடியாது. இந்தியாவில் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவது நம் பண்பாடும், நம்பிக்கைகளும், தர்மம் தலைகாக்கும் என்ற இந்து தர்மமும்தான் என்பதை உணர்த்துகிறது இப்படம்.

     படத்தில் நடித்த அனைவரையும் கௌரவிக்கலாம். வசன உச்சரிப்பு, விழியசைவு, உடலசைவு, திரும்புதல், பார்த்தால், நடப்பது, ஓடுவது என எல்லா விதத்திலும் முழுமையாகச் செய்திருக்கிறார் ஆர்யா. பூஜா என்கிற அம்சவல்லி கண் பார்வையில்லாதவராக நடிப்பில் உருக்கியிருக்கிறார். அதிலும் கடைசிக் காட்சியில் அவருடைய நீண்ட வசனமும், பேசும்விதமும் உருக்கத்தைக் கொடுக்கிறது. ஆர்யாவோ பூஜாவோ படத்தில் தெரிய மாட்டார்கள் ருத்ராவாகவும் அம்சவள்ளியாகவும் அவர்கள் மாறி இருக்கிறார்கள்.

     படத்தின் ஜீவன் உடல் ஊனமுற்ற, மனநிலை குன்றிய, குரூர முகம் கொண்ட அந்த ஜீவன்கள்தாம். பிரமாதமான நடிப்பு. ஒவ்வொரு முகமும் வாழ்நாளில் மறக்க முடியாதபடி நிரந்தரமாகப் பதிந்து விடுகிறது. குடும்பங்களற்ற அந்த மனிதர்கள் அங்கே குடும்பமாய் பிணைக்கப்பட்டிருப்பதும், அவர்களது கிண்டல் பேச்சுக்களும் நம்மை ஒருவிதத்தில் ஆசுவாசப் படுத்துகின்றன.

     உடல் குன்றிய மனிதர்களை கடத்தி வந்து பராமரிக்கும் அவரே இரவில் பாட்டில் வாங்கி வந்து, குடித்து அவர்களோடு அடிக்கும் லூட்டிகள், போதையேறி அவர் நிதானமிழந்ததும் அவர்கள் அவரை வைத்து செய்யும் கிண்டல்கள், தமிழில் அபூர்வமான காட்சிகள். போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு சவுண்ட்டிற்கே கக்கத்தில் தொப்பியை வைத்துக் கொண்டு ஓடி வந்து விழுவது.. கோர்ட்டில் நீதிபதி இன்ஸ்பெக்டரை எடக்கு, மடக்காகக் கேள்வி கேட்பது என பாலாவின் டச் ஆங்காங்கே தெரிகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் ஒன்று கூடி ஒரே கோவில் வாசலில் பிச்சை எடுக்க, இரவு வந்ததும் ஒரே அறையில் எல்லோரும் அமர்ந்து அரட்டைகள் அடிப்பதும், பின் விடிந்ததும் எல்லோரும் பிச்சை எடுக்க போவதும் என அவர்களின் வித்தியாச வாழ்க்கையை சமரசம் இல்லாமல் அப்படியே தந்திருக்கும் பாலாவுக்கு சபாஷ்!

     பாதாளக் கோவிலின் லைட்டிங், சுடுகாட்டு நெருப்பின் ஜுவாலைகள், நதியின் பாய்ச்சல், சண்டைக் காட்சிகளின் வேகம், வித்தியாசமான கலர் மற்றும் லைட்டிங்கில் போலீஸ் ஸ்டேஷன், என ஆர்தர் வில்சனின் கேமரா காட்டும் அனைத்தும் அருமை. இளையராஜா பின்னணி இசையில் தன் முத்திரையை பதித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இளையராஜாவின் இசை ஒரு தூண். ஜெயமோகன் வசனங்கள் படத்தோடு சேர்ந்திருக்கின்றன.

     நாயரின் பிணத்தை அகோரி என்ன செய்தார் என்பது பார்வையாளர்களுக்குப் புரியாமலேயே போய் விடுகிறது. அம்சவல்லி எப்படி கன்னிகாஸ்தீரிகளிடம் அடைக்கலமாகி மதம் மாற்றப்படுகிறார், எப்படி அங்கிருந்து வெளிவருகிறார் என்பவையெல்லாம் வெட்டப்பட்டுள்ளன. பந்தங்களை அறுத்தெறிந்து விட்டு வரும்படி குரு ருத்ரனைச் சொல்லி அனுப்புகிறார். அதை எப்படி ருத்ரன் செய்தார் என்பது குறித்து எந்தவிதமான காட்சிகளும் இல்லை. கதை நிகழும் நிலப்பரப்பை இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஊரற்ற, பேரற்ற வெளியாக இருக்கட்டும் என நினைத்திருக்கலாம். இந்தச் சிறுசிறு குறைகளை மீறியும் இந்தப் படம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

     படம் பார்த்தவர்களைப் பல நாட்கள் உறக்கம் இல்லாமல் செய்துவிடக் கூடிய வலுவான பாத்திரங்கள், காட்சி அமைப்புகள். சந்தேகமில்லாமல் உக்கிரமான ஒரு நல்ல படம்.




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2009/naankadavul2.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs