http://www.tamilthiraiulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
திரை உலக தகவல்கள்
-திரைப்பட நகருக்கு கருணாநிதி அடிக்கல்
-ஜெயம் ரவியின் அடுத்த படம் பூலோகம்
-ஒரே நேரத்தில் 7 படத்தில் பூர்ணா
-நடிகர் சூர்யா - ஒரு பார்வை
-நடிகை த்ரிஷா - ஒரு பார்வை







தமிழ் திரைப்படங்கள்



நான் கடவுள்

நடிப்பு
ஆர்யா, பூஜா, பாரதி, ரஞ்சனி, கிருஷ்ணமூர்த்தி, முரளி, திருநங்கை B. கீர்த்தனா

படத்தொகுப்பு
சுரேஷ் அர்ஸ்

கலை
பி. கிருஷ்ணமூர்த்தி

பாடல்கள்
வாலி, இளையராஜா, பரத் ஆச்சார்யா

ஒளிப்பதிவு
ஆர்தர் ஏ. வில்சன்

சண்டை
சூப்பர் சுப்பராயன்

வசனம்
ஜெயமோகன்

இசை
இளையராஜா

கதை, திரைக்கதை, இயக்கம்
பாலா

தயாரிப்பு
கே.எஸ். சீனிவாசன்

     தான் பெற்ற மகனால் குடும்பத்திற்கு ஆகாது என்று நான்கு ஜோதிடர்கள் கூறியதால் மகன் ருத்ரனை காசியில் கொண்டு போய் தொலைத்துவிட்டு வருகிறார் அப்பா நமச்சிவாயம். 14 வருடங்களுக்குப் பிறகு குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள், ஆற்றில் எ‌ரியும் சிதை இவற்றுக்கு நடுவே தவக்கோலத்தில் மகனைக் கண்டுபிடிக்கிறார்.

     சுற்றம் துறந்த அகோரித் துறவியாக உள்ளான் மகன் ருத்ரன். "அகோரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர்" என அறிவுரை சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் குரு.

     ஊருக்கு வந்த பிறகும் வீட்டோடு ஒட்டாமல் இருக்கிறான். இது குடும்பத்தினருக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை அப்படியே விட்டு விடுகிறார்கள்.

     ருத்ரன் மலைக்கோவிலில் கஞ்சா கிடைப்பதை அறிந்து அங்கேயே தங்கிவிட, சடை வளர்த்து ஊரை ஏமாற்றி கோவிலுக்குள் இருந்து வரும் போலிச் சாமியார்கள் ருத்ரனின் மந்திரங்களையும் தோற்றத்தையும் பார்த்து, இவன் உண்மையிலேயே சாமி தான் என எண்ணி, சாமிக்கு சிஷ்யராகிறார்கள். சாமியும் கஞ்சாவை மட்டும் உணவாய்க் கொண்டு தியானம் செய்து வருகிறார்.

     உடல் ஊனமுற்றவர்களையும் மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், உறவற்றவர்களையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெ‌ரியாத அம்சவல்லி. தாண்டவன், முக அழகு குறைந்த ஒருவனுக்கு அவளை விற்க முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள். பாதுகாப்பு தேடி அவள் ருத்ரன் இருக்கும் மலைக்கோயிலை அடைகிறாள். அவளை விற்க முயன்ற இடைத்தரகரைக் கொன்று பாதுகாப்பு அளிக்கிறான் ருத்ரன்.

     இதனால் கொலை வழக்கில் கைதாகி ருத்ரன் நீதிமன்றம் கொண்டு செல்லப்படுகிறான். காவலர்களால் அவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்க இயலாமல் போகிறது. மேலும் அவனை தாண்டவனிடம் மாட்டி விட நினைக்கும் காவலர்கள் வழக்கில் இருந்து அவனை விடுவிக்கின்றனர்.

     இதற்கிடையே குரூபி உடன் செல்ல மறுக்கும் அம்சவல்லி மேல் தாண்டவன் கோபம் கொண்டு அவளைக் கொடூரமாகத் தாக்க, அவள் அடைக்கலம் தேடி ருத்ரனிடம் செல்கிறாள். தாண்டவனும் அங்கு வர, தாண்டவனைக் கொல்கிறான் ருத்ரன். மிகவும் மனமொடிந்த அம்சவல்லி, இந்தப் பிறப்பில் இருந்து விடுபடக் கோரி ருத்ரனிடம் மன்றாட, அவளைக் கருணைக் கொலை செய்கிறான். பிறகு, தனது குருவைத் தேடி மீண்டும் காசிக்குச் செல்கிறான் ருத்ரன்.





இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2009/naankadavul.html



ஆன்மீகம்
தினசரி தியானம்

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சென்னைநூலகம்.காம்
சமையல்அறை.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்