http://www.tamilthiraiulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
திரை உலக தகவல்கள்
-திரைப்பட நகருக்கு கருணாநிதி அடிக்கல்
-ஜெயம் ரவியின் அடுத்த படம் பூலோகம்
-ஒரே நேரத்தில் 7 படத்தில் பூர்ணா
-நடிகர் சூர்யா - ஒரு பார்வை
-நடிகை த்ரிஷா - ஒரு பார்வை







தமிழ் திரைப்படங்கள்



மோதி விளையாடு

நடிப்பு
வினய், காஜல் அகர்வால், கலாபவன் மணி, வி.எம்.சி.ஹனீபா, யுவா, 'அல்சே' ராம், அமித் தவான், சந்தானம், மயில்சாமி

படத்தொகுப்பு
வி.டி.விஜயன்

கலை
மிலன்

பாடல்கள்
வைரமுத்து

நடனம்
சின்னி பிரகாஷ், கல்யாண்

ஒளிப்பதிவு
ஏ.டி.கருண்

இசை
ஹரிஹரன்-லெஸ்லி (கலோனியல் கஸீன்ஸ்)

கதை, வசனம்
எஸ்.ராமகிருஷ்ணன்

திரைக்கதை, இயக்கம்
சரண்

     ராஜன் வாசுதேவ் (கலாபவன் மணி) ஒரு பெரிய, மோசமான பணக்காரர். உலகம் முழுக்க அவருக்கு தொழில்கள். அவரது ஒரே மகன் உதய் (வினய்). உதய்யின் நண்பனாக கூடவே இருப்பவர் மதன் (யுவன்). குடி, கலாட்டா என ஊரைச் சுற்றுகின்றனர் இருவரும்.

     கல்லூரி மாணவி ஈஸ்வரியால் உதய்யின் சொகுசு கார் விபத்துக்குள்ளாகிறது. காருக்கு ஏற்பட்ட ரூ.3 லட்சம் இழப்பை சரிகட்ட ஈஸ்வரியை சில நாட்கள் தன் வீட்டில் வேலை செய்ய வைக்கிறார். அப்போது இருவரும் காதல் வயப்படுகின்றனர். மதனும் ஈஸ்வரியை விரும்புகிறார்.

     இதற்கு இடையே, ராஜன்வாசுதேவின் எதிரிகள் உதய்யை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். குறி தவறிய புல்லட் மதன் மேலே பாய அவர் உயிரிழக்கிறார். மீண்டும் எதிரிகளால் துரத்தப்படுகிறார் உதய். மதனின் மரணத்திற்கு பிறகு உதய்யிடம் இருந்த பணம், வசதி, பங்களா, செக்கியூரிட்டி என எல்லாமே பறிபோய்விடுகிறது. அப்போதுதான், உதய், ராஜன் வாசுதேவின் மகனே இல்லை என்பதும் இறந்து போன மதன் தான் அவரின் உண்மையான மகன் என்பதும் உதய்க்கு தெரிய வர அவர் அதிர்ந்து போகிறார். நிர்க்கதியாகும் வினய்க்கு காதலி காஜல் ஆதரவாகிறார். தந்தையுடனும் கொலைகார கும்பலிடமும் மோதி எப்படி வெற்றி பெறுகிறார் உதய் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

     பி.எம்.டபிள்யு., கார்கள், ஹெலிகாப்டர்கள், சொகுசு பங்களா, பாதுகாவலர்கள், வேலையாட்கள் என வினய் கோடீஸ்வர வாரிசாகவே வலம் வருகிறார். எல்லாம் இருந்தும் நடிப்பில் முத்திரை பதிக்க தவறிவிட்டார். அதே போல் தேவையில்லாமல் சொந்த குரலில் பேசி சொதப்பியிருக்கிறார்.

     காஜல் அகர்வாலிடம் துளளலும், துடிப்பும், இளமையும் இருக்கிறது. நன்றாக ஆடுகிறார், பாடுகிறார். மொத்தத்தில் அழகான ராட்சஸி என்று சொல்லலாம்.

     புதிதாக அறிமுகமாகியிருக்கும் யுவா, துடிப்பான புது வரவு. கலாபவன் மணிக்கு இந்த வேடம் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. வினய்யின் செகரட்டரி அல்சேவாக அறிமுகமாகியிருக்கும் மொட்டைத் தலை ராமின் நடிப்பும், அவரது மொட்டைத் தலையில் வரையப்பட்டிருக்கும் டாடுக்களும் பிரமாதம். சந்தானம், எப்போதும் போல கதாநாயகனின் நண்பனாக வந்து சிரிப்பூட்டுகிறார். ஆனால் சிரிப்பு தான் வரவில்லை. ஹனிஃபாவின் டயலாக் டெலிவ‌ரியும், மயில்சாமியின் லிக்கர் காமெடியும் அருமை.

     ஹரிஹரன்-லெஸ்லி இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. "மோதி விளையாடு" பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசையை மீறி வசனத்தை கேட்க தனித் திறமை வேண்டும். கதை வசனம் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் என்று டைட்டிலில் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

     கருணின் ஒளிப்பதிவு அருமை. பணக்காரத்தனமான காட்சி அமைப்புகள் பார்க்கும்படி உள்ளன. முதல் பாதியில் இளமை துள்ளலுடன் எடிட்டிங் செய்துள்ளார் விஜயன்.

     படம் முழுக்க வெளிநாட்டிலேயே எடுத்தது பல இடங்களில் நன்றாக இருந்தாலும், சில இடங்களில் ஒத்துப் போகவில்லை. குறிப்பாக சென்னையைக் குறிக்கும் காட்சிகளில்.

     திரைக்கதையிலா, படத்தை எடுத்த விதத்திலா எதில் கோட்டை விட்டார் சரண் என்று பட்டிமன்றமே நடத்தலாம். பலமற்ற கதை, நேர்த்தியற்ற திரைக்கதை, தரமற்ற நகைச்சுவை, ஆபாச வசனங்கள், கவர்ச்சி பாடல்கள், என அத்தனை தேவையற்ற விஷயங்களையும் உள்ளடக்கிய படத்தில் மோதி விளையாட இடமே இல்லாமல் செய்துவிட்டார் சரண். படம் பார்ப்பவர்கள் ஒருவருக்கொருவர் மோதி விளையாடாமல் இருந்தால் சரி!




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2009/modhivilaiyadu.html



ஆன்மீகம்
தினசரி தியானம்

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சென்னைநூலகம்.காம்
சமையல்அறை.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்