http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





வாரணம் ஆயிரம்

நடிப்பு
சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா

ஒளிப்பதிவு
ரத்னவேலு

கலை
ராஜீவன்

படத் தொகுப்பு
ஆண்டனி

பாடல்கள்
தாமரை

இசை
ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம்
கவுதம் வாசுதேவ் மேனன்

தயாரிப்பு
ஆஸ்கர் பிலிம்ஸ் - க்ளௌட் நைன்

     ராணுவ அதிகாரி மேஜர் சூர்யா, ஒரு அதிரடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது அவருடைய தந்தை இறந்த செய்தி வருகிறது. அதனால் மனம் உடைந்தாலும் தந்தை சொல்லிக் கொடுத்த கடமையுணர்ச்சி அவரைத் திரும்ப விடாமல் தொடர்ந்து அந்த மீட்புப் பணியில் இறங்க வைக்கிறது. அப்பா இறந்த சோகம் பழைய ஞாபகங்களை நினைவில் கொண்டு வருகிறது.

     ஒவ்வொரு குழந்தைக்கு தன் தந்தை தான் முதல் கதாநாயகன். அதே போல் மகன் சூர்யாவிற்கும் அப்பா சூர்யாதான் கதாநாயகன். எல்லா விஷயங்களிலும் அப்பாவையே உதாரண புருஷனாகக் கொள்கிறார். ஆனால் சாதாரண கல்லூரி மாணவனைப் போல் மகன் சூர்யாவும் ஒழுங்காகப் படிக்காமல் கல்லூரி வாழ்க்கையை வீணடிக்கிறார். ஒரு சமயம் அப்பாவும், அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்ட கதையை அம்மா சொல்லக் கேட்கிறார் மகன் சூர்யா. அந்தக் கதையில் வருவது போன்றே ஒரு நாள் இரயில் பயணத்தின் போது சமீரா ரெட்டியை சந்திக்கிறார். தன் அப்பாவை போல் தானும் சமீரா ரெட்டியை காதலால் வீழ்த்துவேன் என்று உறுதி கொள்கிறார். ஆனால் இந்த தடாலடி காதலில் நம்பிக்கை இல்லாத சமீரா தட்டிக்கிழக்கிறார். ஆனால் சூரியா விடாமல் அடுத்த வாரம் அவரை வீட்டில் சந்திக்கிறார். அப்போதும் சூர்யா மீது முழு நம்பிக்கை கொள்ளாத சமீரா தான் அமெரிக்காவுக்குப் போக உள்ளதாக தெரிவிக்கிறார். இதனால் சூர்யா தானும் அமெரிக்கா செல்ல முடிவெடுக்கிறார்.

     ஆனால் அதே நேரம் பார்த்து அவருடைய அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட வேறு வழி இல்லாமல் அமெரிக்கா செல்லும் முடிவை தள்ளிவைக்கிறார். தன் கிதார் இசைத் திறமையை வைத்து சம்பாதித்து அப்பா தொடங்கிய வீட்டை கட்டி முடிக்கிறார். பின் படிப்படியாக முன்னுக்கு வருகிறார். அப்பா அம்மாவின் ஆசிர்வாதத்துடன் காதலியைத் தேடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் இவரைப் பார்த்த சமீரா ரெட்டி இவரின் காதலின் ஆழத்தை உணர்ந்து அவரும் காதலிக்க துவங்குகிறார். ஆனால் எதிர்பாராமல் ஒரு குண்டு வெடிப்பில் உயிர் துறக்கிறார் சமீரா. காதலியை இழந்த துக்கத்தில் எல்லாவித தீய பழக்கத்திற்கும் அடிமையாகிறார். அவரை அப்பழக்கங்களிலிருந்து தேற்றும் பெற்றோர் மனமாற்றத்திற்காக அவரை காஷ்மீருக்கு அனுப்புகின்றனர். அங்கு காதலி நினைவில் இலக்கில்லாமல் சுற்றுகிறார் சூர்யா. அந்த சமயத்தில் சூர்யா அமெரிக்காவிலிருந்து காதலி இறந்த துக்கத்தில் வரும் போது விமானத்தில் சந்தித்திருந்த ஒரு நல்ல மனிதரின் மகன் கடத்தப்படுகிறார். இதையறிந்த சூர்யா கஷ்டப்பட்டு அவர் மகனை மீட்கிறார். பின்னர் ஊர் திரும்பும் சூர்யா பெற்றோரிடம் தான் இராணுவத்தில் சேர விரும்புவதாக கூறுகிறார். வேறு வழியின்றி மகனின் விருப்பத்திற்கு இசைகின்றனர் பெற்றோர். தங்கையின் தோழியின் வடிவில் தன் இழந்த காதலை மீண்டும் காண்கிறார் சூர்யா. அவரின் இராணுவ இலட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதோடு படம் முடிகிறது.

     கௌதம் மேனன் தன் தந்தையை நினைவில் கொண்டு எடுத்துள்ள படம் இது. அதை உணர்ந்து சிறப்பாகச் செய்திருக்கிறார் சூர்யா. 20வயது இளைஞனாக, இராணுவ வீரனாக, வயதான அப்பாவாக என பலவித தோற்றத்தையும் மிகவும் நேர்த்தியாக நம் கண்முன் கொண்டுவந்துள்ளார் சூர்யா. பிதாமகன், காக்க காக்க படங்களில் காட்டிய திறமையை விட பலமடங்கு திறமையை இப்படத்தில் காட்டி நடித்துள்ளார் சூர்யா என்றே சொல்ல வேண்டும். பல இடங்களில் அவர் தன் தந்தை சிவக்குமாரை மிஞ்சும் அளவுக்கு நடித்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.

     சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா மூன்று பேரும் தங்களின் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். தாமரையின் பாடல் வரிகள் இதம். ஹாரிஸ் ஜெயராஜின் இசை அருமையோ அருமை. ஒளிப்பதிவில் ரத்னவேலு நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். சான்பிராஸ்சிஸ்கோவை மிகவும் அழகாக காட்டியுள்ளார்.

     படத்தின் முதல் பாதி போவதே தெரிவதில்லை என்றாலும், இரண்டாம் பாதி சற்றே மெதுவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம். அதே போல் ஆங்கில வசனங்களையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். இது போன்ற சிறு சிறு குறைகள் இருந்தாலும் ஒரு அருமையான நல்ல படத்தை தந்ததற்காக கௌதம் மேனனை பாராட்டியே தீர வேண்டும்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/vaaranamaayiram.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs