http://www.tamilthiraiulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
திரை உலக தகவல்கள்
-திரைப்பட நகருக்கு கருணாநிதி அடிக்கல்
-ஜெயம் ரவியின் அடுத்த படம் பூலோகம்
-ஒரே நேரத்தில் 7 படத்தில் பூர்ணா
-நடிகர் சூர்யா - ஒரு பார்வை
-நடிகை த்ரிஷா - ஒரு பார்வை







தமிழ் திரைப்படங்கள்



சிலம்பாட்டம்

நடிப்பு
சிம்பு, சனாகான், பிரபு, சினேகா, பொன்வண்ணன், நெடுமுடிவேணு, கருணாஸ், சந்தானம்

ஒளிப்பதிவு
மதி

இசை
யுவன் சங்கர் ராஜா

இயக்கம்
சரவணன்

தயாரிப்பு
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்

     சிலம்பாட்டம் ஒரு சராசரிக் கதை. அதுவும், அக்ரஹாரப் பின்னணியோடு தந்தையைக் கொன்றவனை மகன் பழிவாங்குகிற கதை.

     கோயில் அர்ச்சகராக இருக்கும் அம்மாஞ்சி அம்பி சிம்பு ஒரு கட்டத்தில் ரௌடிகளை எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது. அப்போது ஜெயிலிலிருந்து வெளியேவரும் பிரபு, சிம்புவைத் தேடி வருகிறார். அங்கே தொடங்குகிறது பிளாஸ்பேக். பங்காளிச் சண்டையில் பிளாஸ்பேக் முடிவில் உயிரை விடுகிறார் சிம்பு. அதிரடி சிம்புவுக்கும் அம்மாஞ்சி சிம்புவுக்கு உள்ள தொடர்பை சொல்லும் சிலம்பாட்டம்.

     எந்த நோக்கத்தில் சினேகாவுடன் ஜோடி சேர்ந்தாரோ அது முழுமையாகவே நிறைவேறியிருக்கிறது சிம்புவுக்கு. அவரும் வாங்கின காசுக்கு வஞ்சனையில்லாமல் காட்ட வேண்டிய எல்லை வரை கவர்ச்சி காட்டியிருக்கிறார். ஒரு சிம்புவின் இம்சையே தாங்க முடியாது. இதில் இன்னொரு சிம்பு வேறு.

     எதையோ நினைத்து எங்கோ இடிப்பது போல, தேவையே இல்லாமல் ரஜினியை வேறு தாக்குவதாக வசனம்.

     படம் முழுக்க ஆபாச வசனங்கள் நெடி தாங்க முடியவில்லை.

     சனாகான் பாவாடை தாவணியில் மிளிர்கிறார். பாடல்களில் கவர்ச்சி காட்டுகிறார்.

     பிரபு, பொன்வண்ணன், நெடுமுடி வேணு போன்ற பிரமாதமான நடிகர்களை வீணடித்திருக்கிறார்கள்.

     கருணாஸ் வரும் சில காட்சிகள் கைத்தட்டல் பெறுகின்றன.

     இந்தப் படத்தின் ஒரே ஆறுதல் யுவன் சங்கரின் இசை. மதியின் கேமரா நன்றாக இருக்கிறது. பாடல்களின் காட்சியமைப்பு அத்தனை நன்றாக இல்லை.

     சிலம்பாட்டம் மெச்சும்படி இல்லை.




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/silambattam.html



ஆன்மீகம்
தினசரி தியானம்

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சென்னைநூலகம்.காம்
சமையல்அறை.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்