http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





சேவல்

நடிப்பு
பரத், பூனம் பஜ்வா, சிம்ரன், வடிவேலு, ராஜேஷ், ஒய்.ஜி. மகேந்திரன்

ஒளிப்பதிவு
பிரியன்

எடிட்டிங்
வி.டி. விஜயன்

இசை
ஜி.வி. பிரகாஷ்குமார்

இயக்கம்
ஹரி

தயாரிப்பு
எம்.ஏ. ஜின்னா

     பூ வியாபாரம் செய்யும் ராஜேஷின் மகனாக பரத். பொறுப்பில்லாமல் பொழுதைக் கழிக்கிறார் பரத். பரத்தின் பெரியப்பா மகனாக போஸ்ட் மேன் வேலை பார்க்கும் வடிவேலு. கோயில் குருக்களின் மகள் பூனம் பஜ்வா மேல் காதல் கொள்கிறார் பரத். முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பிறகு பச்சைக் கொடி காட்டுகிறார் பூனம்.

     ஆனால் பூனம்மின் அக்கா சிம்ரனுக்கு திடீரென புற்று நோய் தாக்க, அக்கா புருஷனுக்கு இரண்டாம் தாரமாகிறார் பூனம். திடீரென அத்தானும் விபத்தில் இறந்து விட, கொழுந்தன் கிருஷ்ணா, வில்லன் சம்பத்ராஜ் ஆகியோர் காமம் கொண்டு பூனத்தை துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து பரத் எப்படி காதலியை மீட்கிறார் என்பதே கதை.

     நெல்லை வட்டார கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை கஷ்டப்பட்டு மாற்றிக் கொண்டுள்ளார் பரத். காமெடியிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

     அழகாக, குடும்ப பாங்காக வரும் புதுமுகம் பூனம் பஜ்வா தன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்றே கூறவேண்டும். அக்கா வேடத்தில் வரும் சிம்ரன் தன் மறுவருகையை நன்றாகவே செய்திருக்கிறார்.

     படம் முழுவதும் வருகிறார் வடிவேலு. ஆனால் காமெடி தான் எடுபடவில்லை. ராஜேஸ், கிருஷ்ணா, சம்பத்ராஜ் ஆகியோர் தத்தம் பாத்திரத்திற்கேற்ப நடித்துள்ளனர்.

     ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் 'துளசி செடிய' பாடலும் 'தாயாரம்மா தாயாரு...' பாடலும் கேட்கும்படி உள்ளன. பிரியனின் ஒளிப்பதிவு அருமை.

     கதையில் திருப்பங்கள் பல இருந்தாலும், எல்லாம் பார்வையாளருக்கு முன் கூட்டியே தெரிந்து விடும் அளவிற்கு அரத பழசானவையே. பல படங்களில் பார்த்து சலித்த அக்ரஹாரம், இளம் மாமிகள், வேற்று ஜாதி காதலன், விதவை மறுமணம், பிராமண சம்பிரதாய எதிர்ப்பு போன்றவற்றை மீண்டும் தந்து பார்வையாளர்களை வெறுப்பேற்றியிருக்கிறார் இயக்குனர் ஹரி என்றே கூறவேண்டும். பல பிளாஷ்பேக்குகளும் வேறு மக்களை குழப்புகிறது. இயக்குனர் ஹரி திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்திருக்கலாம்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/seval.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs