http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





சரோஜா

நடிப்பு
எஸ்.பி.பி.சரண், பிரேம்ஜி, சிவா, வைபவ், பிரகாஷ் ராஜ், ஜெயராம், நிகிதா, வேகா

எடிட்டிங்
பிரவீன்-ஸ்ரீகாந்த்

கலை
விதேஷ்

ஒளிப்பதிவு
சக்தி சரவணன்

சண்டை
செல்வா

நடனம்
கல்யாண் & சரவண ராஜன்

பாடலாசிரியர்
வாலி, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா

இசை
யுவன் ஷங்கர் ராஜா

இயக்கம்
வெங்கட் பிரபு

தயாரிப்பு
டி.சிவா

     டிவி நடிகர் அஜய்குமார் (சிவா), படுஜாலி பேர்வழி கணேஷ் (பிரேம்ஜி), இரண்டு தெலுங்கு சகோதரர்கள் ஜகபதிபாபு (எஸ்பிபி சரண்), ராம்பாபு (வைபவ்) ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஐதராபாத்தில் நடக்கும் கிரிக்கெட் மாட்ச் பார்க்க சென்னையிலிருந்து ஒரு ஓட்டை கேரவனில் கிளம்புகிறார்கள்.

     அதேநேரம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஸ்வநாத்துக்கு (பிரகாஷ் ராஜ்) ஒரு பிரச்சனை. அவரது மகள் சரோஜா (வேகா) கடத்தப்படுகிறார். சரோஜாவை விடுவிக்க கடத்தல்காரன் பத்து கோடி கேட்கிறான். விஸ்வநாத் தனது போலீஸ் நண்பர் ரவிச்சந்திரனின் (ஜெயராம்) உதவியை நாடுகிறார்.

     இதனிடையே நான்கு நண்பர்கள் ஹைதராபாத் செல்லும் வழியில் ஒரு மிகப் பெரிய விபத்து காரணமாக டிராபிக் ஜாம் ஆகவே மாற்று வழியில் புறப்படுகிறார்கள். அங்கு இவர்களது வேனுக்கு இடையில் வந்துவிழுகிறார் போஸ் வெங்கட். குண்டு காயத்துடன் இருக்கும் அவரைக் காப்பாற்ற நண்பர்கள் முயற்சிக்கிறார்கள்.

     அப்போது அங்கு வரும் வில்லன் சம்பத், போஸை கொல்கிறார். இதை மறைந்திருந்து பார்க்கும் நண்பர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். அங்கிருந்து உயிர் தப்பினால் போதும் என கிளம்புகிறார்கள். அப்போது சரண், தனது பர்ஸை வில்லன்கள் இடத்தில் தவற விட்டதை அறிந்து அதிர்கிறார்.

     பர்ஸை எடுக்க திரும்ப அதே இடத்துக்கு நண்பர்கள் கிளம்புகிறார்கள். அப்போதுதான் அங்கு வேகாவை கடத்தி வைத்திருப்பது தெரிகிறது. வேகாவையும் காப்பாற்றிக் கொண்டு செல்ல தயாராகிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? வில்லன் கும்பலை ஜெயராம் பிடித்தாரா? என்பதைச் சொல்கிறது 'சரோஜா' படத்தின் இறுதிக் காட்சி.

     பிசினஸ்தான் முக்கியம் என அலையும் பிரகாஷ் ராஜுக்குள் இருக்கும் தந்தை, குடும்பத்தை நினைத்து கலங்கும் சரண், நண்பனை இழந்துவிடுவோமோ என தவித்து போகும் ஷிவா, உயிரை கையில் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும்போதும் கலாய்த்துக் கொண்டிருக்கும் பிரேம்ஜி என படத்தை ஒவ்வொருவரும் தூக்கி நிறுத்துகிறார்கள்.

     சரண் சிறிய ஓட்டைக்குள் மாட்டிக்கொண்டு மரண பயணத்தை வெளிப்படுத்தும் இடம் அருமை. பிரேம்ஜி அமரன் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு அலையலையாய் பரவுகிறது. எந்த பெண்ணை பிரேம்ஜி பார்த்தாலும் தேவதைகள் சூழ்ந்துகொண்டு டான்ஸ் ஆடுவது, வேகா வைபவ்வின் கையை பிடிக்கும்போது பிரேம்ஜியின் பின்னணியில் ஒலிக்கும் சோகப் பாட்டு போன்ற காட்சிகள் இதமானவை. பேக்டரிக்குள்ளேயே கதை ரொம்ப நேரம் சுற்றிக் கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

     பிரகாஷ் ராஜ், போலீஸ் ஜெயராம் இருவரும் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். நிகிதா கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார். சரோஜாவாக வரும் வேகா நல்ல அறிமுகம்.

     யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். 'தோஸ்து படா தோஸ்து', 'கோடானு கோடி' பாடல்கள் அருமை. ஷக்தி சரவணின் ஒளிப்பதிவும் பிரவீன்-ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம்.

     பேபெல் (Babal) படத்தின் இன்ஸ்பிரேஷனில் சரோஜா திரைக்கதையை அமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. ஒருநாள் சம்பவமே படம். அழுத்தமான கதை இல்லாவிட்டாலும், ஒரு சின்ன முடிச்சை வைத்துக் கொண்டு, கலகல விறுவிறு சம்பவங்களுடன் படத்தை நகர்த்திச் சபாஷ் பெறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/saroja.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs