http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





பஞ்சாமிர்தம்

நடிப்பு
பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம், சரண்யா மோகன்

இசை
சுந்தர் சி பாபு

இயக்கம்
ராஜூ ஈஸ்வரன்

தயாரிப்பு
அபிராமி ராமநாதன்

     விடுமுறைக் காலம் என்பதால், குழந்தைகளைக் குறிவைத்து ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள் பஞ்சாமிர்தம் படத்தை. இந்த டெக்னிக் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

     கதை ராமாயண காலத்திலிருந்து தொடங்குகிறது.

     குருவின் மகளை யார் காதலிப்பது என்பதில் மாரீசனுக்கும், இடும்பனுக்கும் மோதல். இதில் இடும்பனை வீழ்த்தி காலில் தண்டையாக மாட்டி வெற்றி கொள்கிறான் மாரீசன். இராவணன் உத்தரவுப்படி சீதையை கவர பொன்மான் வேடமிடும் மாரீசன் ராமனால் கொல்லப்பட்டு பூமியில் புதைந்து மலையாகிறான். இது முன் ஜென்ம கதை.

     இந்தக் கதை அப்படியே 21ம் நூற்றாண்டுக்கு தாவுகிறது.

     எஸ்டேட் அதிபர் நாசரை ஏமாற்றி அவரது சொத்துக்களை பறிக்க முயலும் உறவினர்களிடமிருந்து அவரைக் காக்க வருகிறார் சொந்தபர் பேத்தியான சரண்யா மோகன்.

     நாசர் அப்பாவின் தாலி கட்டாத மனைவியின் மகன் இன்னொரு நாசர். இவர் மீனவர். இவரும் நாசரிடமிருந்து சொத்தை பறிக்க வருகிறார். உறவுக்காரர்கள் சரண்யா மோகனை தீர்த்துக் கட்ட மலையில் இருந்து தள்ளிவிடுகிறார்கள். விழும்போது அவர் பாதம்பட்டு பாவ விமோசனம் பெறுகிறார் மாரீசன். தன் கதையை கூறி சரண்யாவின் நண்பனாகிறார். மாரீசனின் காலில் இருந்து கழன்று விழும் தண்டம் மீனவ நாசர் கையில் கிடைக்கிறது. அதிலிருந்து வரும் இடும்பன் நாசருக்கு உதவுகிறார்.

     மனிதர்களின் பகையை வைத்து, தங்கள் சொந்தப் பகையை தீர்த்துக் கொள்ள மோதுகிறார்கள் மாரீஸனும் இடும்பனும்.

     மாயாவி மாரீஸன் என்ற தொடர்தான் படமாகியுள்ளது. ஆனால் சீரியலை விட இதில் சிரிப்பும் அதிகம், படமாக்கமும் அருமை.

     ராவணனாக வந்து கதையை தொடங்கி வைத்து மறைகிறார் பிரகாஷ்ராஜ். மாரீசனாக ஜெயராம். இடும்பனாக படத்தின் இயக்குநர் ராஜூ ஈஸ்வரன், மந்தாகினியாக சமிக்ஷா. இன்றைய நடிகர்களை இப்படி மாறுபட்ட வேடத்தில் பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கிறது.

     ஜெயராமுக்கும், ராஜூ ஈஸ்வருக்கும் நடக்கும் மோதல் சுவாரஸ்யமாகவே உள்ளது. இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் இருப்பதே தெரியவில்லை படத்தில். இப்படிப்பட்ட படங்களுக்கு அப்படித்தான் இருக்க வேண்டும்.

     முதல் படத்திலேயே குழந்தைகள் மனதில் இடம்பிடிப்பது போன்ற க்ளீன் எண்டர்டெயின்மெண்ட் தந்துள்ள அபிராமி ராமநாதனைப் பாராட்டத்தான் வேண்டும்!



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/panchamirtham.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs