http://www.tamilthiraiulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
திரை உலக தகவல்கள்
-திரைப்பட நகருக்கு கருணாநிதி அடிக்கல்
-ஜெயம் ரவியின் அடுத்த படம் பூலோகம்
-ஒரே நேரத்தில் 7 படத்தில் பூர்ணா
-நடிகர் சூர்யா - ஒரு பார்வை
-நடிகை த்ரிஷா - ஒரு பார்வை







தமிழ் திரைப்படங்கள்



காத்தவராயன்

நடிப்பு
கரண், விரிஷா, வடிவேலு, தண்டபாணி, இளவரசு

ஒளிப்பதிவு
கார்த்திக்ராஜா

இசை
ஸ்ரீகாந்த் தேவா

இயக்கம்
சலங்கை துரை

தயாரிப்பு
சில்வர் ஜூப்ளி பிலிம்ஸ்

     சாராயம் காய்ச்சும் தொழிலையே நேர்மையாக செய்பவர் கரண். அதனால் அவர் வியாபாரம் வளர, போட்டியாளரான காதல் தண்டபாணியின் வியாபாரம் தேய்கிறது. இதனால் தொழில் போட்டி வளருகிறது.

     இச்சமயத்தில் போதை எதிர்ப்பு பிரசாரத்திற்கு கிராமத்திற்கு வரும் விதிஷா மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். கரணிடம் சாராயம் காய்ச்சுவதை நிறுத்த வேண்டுகிறார். கடைசியில் கரண், சிறை செல்ல காரணாமாகிறார்.

     சென்னையில் ஒரு போதை கும்பலை பிடித்துக் கொடுக்க முயற்சி செய்கிறார் விதிஷா. ஆனால் அவர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டு போதை மருந்தை வைத்திருக்கும் குற்றத்திற்காக சிறைக்குச் செல்கிறார்.

     கரண் சிறையிலிருந்து வெளியே வந்ததும் விதிஷாவை பழி தீர்க்க புறப்படுகிறார். யாரைப் பழிதீர்க்கப் போனோமோ அவரையே காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் மாட்டும் கரண் விதிஷாவை எவ்வாறு வெளியே கொண்டுவருகிறார்? இவர்கள் இருவருக்கும் இடையே இருப்பது காதலா - பகையா? கரணை உண்மையில் ஜெயிலுக்குள் தள்ளியது விதிஷா தந்த புகாரா? இல்லை கரணின் எதிரிகளின் வேலையா போன்ற கேள்விகளுக்கான விடை படத்தின் இறுதியில் தெரிய வருகிறது.

     இப்படத்தில் கரணின் நடிப்பு பாராட்டுதற்குரியது. சாராயம் காய்ச்சும் முரட்டு ஆசாமி கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் கரண். அவரது கோவை பாஷை குறிப்பிடத்தக்கது.

     புதுமுகம் விதிஷாவுக்கு முதல் படத்திலேயே நடிக்க நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குனர். விதிஷாவும் சொன்னதைச் சரியாக செய்துள்ளார். நாயகி விதிஷா ஓரளவு மிளிருகிறார்.

     பாட்டியின் இன்சூரன்ஸ் மூன்று லட்ச ரூபாயை கந்து வட்டிக்கு விட்டு, கண்டபடி மொத்து வாங்குகிறார் வடிவேலு.

     ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரொம்ப சுமார். கார்த்திக்ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். சலங்கை துரையின் இயக்கம் முழு அளவில் வெளிப்படவில்லை என்று தான் கூறவேண்டும்.

     விஷச்சாராய சாவுகள் அடிக்கடி நிகழுவதால் இம்மாதிரி படங்கள் அவசியம் தேவை.




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/kathavarayan.html



ஆன்மீகம்
தினசரி தியானம்

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சென்னைநூலகம்.காம்
சமையல்அறை.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்