http://www.tamilthiraiulagam.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
திரை உலக தகவல்கள்
தமிழ் திரைப்படங்கள்



காதலில் விழுந்தேன்

நடிப்பு
நகுல், சுனேனா, ஹரிராஜ், லிவிங்ஸ்டன், சம்பத், பசி சத்யா

ஒளிப்பதிவு
விஜய் மில்டன்

இசை
விஜய் ஆண்டனி

இயக்கம்
பி.வி. பிரசாத்

தயாரிப்பு
எஸ். உமாபதி

     பட்டினப்பாக்கம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசிக்கும் நகுலுக்கும் பணக்கார வீட்டுப் பெண் சுனேனாவுக்கு ஒரு விபத்தில் காதல் பிறக்கிறது. சுனேனாவின் துப்பட்டாவால் விபத்துக்குள்ளாகும் நகுலை மருத்துவமனைக்கு கொண்டு போய் கூடவே இருந்து கவனிக்கிறார் சுனேனா.

     தீடீரென்று ஒருநாள் சுனேனா இறந்து விடுகிறார். அவள் மீது கொண்ட அதீத காதலால் அவள் இறந்ததை நம்ப மறுக்கிறார் நகுல். அவள் உடலை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். அவரை போலீஸ் துரத்துகிறது. சுனேனா எப்படி இறந்தார்? கடைசியில் நகுல் என்ன ஆனார்? என்பதுதான் கதை.

     'பாய்ஸ்' படத்தில் நடித்த நகுலுக்கு, கதாநாயகனாக இது முதல் படம். சண்டை மற்றும் நடனக் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். வசனக் காட்சிகளில் இன்னும் பயிற்சி தேவை.

     கல்லூரி பெண் பாத்திரத்திற்கேற்ற இயல்பான அழகுடன் நடித்துள்ளார் கதாநாயகி சுனேனா. பெரும்பாலான காட்சிகளில் பிணமாகவே வந்தாலும், நடிப்பில் முதிர்ச்சி காட்டியுள்ளார்.

     காவல் துறை அதிகாரியா வரும் சம்பத்துக்கு முக்கிய பாத்திரமென்றாலும் சிறப்பாக செய்துள்ளார். டிக்கெட் பரிசோதகராக வரும் லிவிங்ஸ்டன் இயல்பாக நடித்துள்ளார்.

     இந்த ஆண்டுக்கான பாடல் நாக்க முக்க பாடல் தான் என்பதில் சந்தேகமில்லை. 'தோழியா என் காதலியா' பாடலும், 'உன் தலைமுடி' பாடலும் மெலடி அருமை. இசையமைப்பாளர் விஜய ஆண்டனிக்கு இது பேர் சொல்லும் படம்.

     ஊட்டியின் அழகை காமிராவில் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

     நம்ப முடியாத கதை, நம்ப முடியாத காட்சி அமைப்புகள் என்றாலும், அவற்றையும் ரசிக்கும்படி தந்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/kadhalilvizhundhen.html




ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்