http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





தனம்

நடிப்பு
சங்கீதா, பிரேம், கோட்டா சீனிவாசராவ், கிரீஷ் கர்னாட், ஆசிஷ் வித்யார்த்தி, கருணாஸ், எம்.எஸ். பாஸ்கர்

கலை
தோட்டாதரணி

ஒளிப்பதிவு
சீனிவாஸ் தேவாம்சம்

இசை
இளையராஜா

இயக்கம்
ஜி. சிவா

தயாரிப்பு
எஸ்.கவுசல்யா ராணி

     சூழ்நிலை ஒன்றால் விபச்சாரத்திற்கு தள்ளப்படும் தாசி சங்கீதா. உடம்பை விற்று சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்யும் இரக்க குணம் கொண்டவர். படிப்பதற்காக ஐதராபாத் போகும் ஆச்சார குடும்பத்தை சேர்ந்த பிரேம், அங்கே சங்கீதாவின் மேல் காதல் கொள்கிறார்.

     முதலில் பிரேமின் காதலை மறுக்கும் சங்கீதா பிறகு காதலுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். ஆச்சாரம் மிகுந்த பிரேமின் குடும்பத்தினர் தாசி என்று தெரிந்தும் தன்னை ஏற்றுக்கொண்டால் திருமணம் செய்துகொள்வதாகவும் இல்லையெனில் தன்னை தன் வழியில் விட்டுவிட வேண்டும் என்கிறார்.

     ஜோதிடர் கோட்டா சீனிவாசராவ் தனம் வீட்டுக்கு வருவது நல்லது என்று கூறுவதை நம்பி சங்கீதாவை பிரேமின் குடும்பமும் ஏற்றுக் கொள்கிறது.

     இதற்கிடையில் சங்கீதாவை அடைய முயல்கிறார் கோட்டா. அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் சங்கீதாவுக்கு குழந்தை பிறக்கிறது. அன்றுமுதல் பிரேம் குடும்பத்தில் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம். குடும்ப ஜோதிடர் கோட்டா சீனிவாசராவ், 'குழந்தையை கொன்றால்தான் எல்லோரும் உயிர் பிழைக்க முடியும்' என்று பயமுறுத்துகிறார். மூடநம்பிக்கையில் மூழ்கிய பிரேம் குடும்பத்தினர் குழந்தைக்கு கள்ளி பால் ஊற்றி கொல்கின்றனர்.

     இதையறிந்த சங்கீதா அந்த குடும்பத்தையும் ஜோதிடரையும் எப்படி பழி தீர்க்கிறார் என்பதே கதையின் முடிவு.

     நெற்றி நிறைய பொட்டு, உதட்டில் சிவப்பு சாயம், வாயில் வெற்றிலைச் சீவல், இறக்கி கட்டிய சேலை, ஒய்யார நடை என பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகுடன் சங்கீதா, படத்தை முழுவதும் தாங்கிப் பிடிக்கிறார். கைகளை உயிரே தூக்கி சோம்பல் முறித்தபடி கஸ்டமர்களை பிடிக்கும் அவரது ஸ்டைல் அலாதி. தனது குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க முடிவெடுத்து, அதை நிறைவேற்றும் நேரத்தில் ராணி மாதிரி உட்கார்ந்து ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே, அசத்தல். இன்னும் சற்று யதார்த்தமாக நடித்திருந்தால் விருதை எதிர்பார்க்கலாம்.

     சங்கீதாவின் காதல் கணவராக வரும் பிரேமின் கதாப்பாத்திரத்தில் யதார்த்தம் குறைவு. கல்யாணத்திற்கு பிறகு அவரது படிப்பு என்ன ஆயிற்று? வேலைக்கு ஏதும் முயற்சிக்கிறார்? என்ற கேள்விக்கெல்லாம் விடையில்லை.

     ஐநூறு ரூபாய் சேர்த்து எப்படியாவது சங்கீதாவை அடைந்து பணக்காரனாகி விடவேண்டும் என்று எண்ணும் கருணாஸின் செயல்கள் சிரிப்பூட்டுகிறது.

     கோட்டா சீனிவாசராவ், கிரீஷ் கர்னாட், ஆசிஷ் வித்யார்த்திஆகியோர் பாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர்.

     ஜீவாவின் ஒளிப்பதிவு கதைக்கு பலமூட்டுகிறது. ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு அருமை. இளையராஜாவின் இசையில் 'கண்ணுக்கு என்ன வேண்டும்' என்ற பாடல் மட்டும் நன்றாயிருக்கிறது.

     இயக்குனர் சிவா திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தி, முன்பாதி லாஜிக் சறுக்கல்களை தவிர்த்திருந்தால், ஒரு சிறந்த படமாக இருந்திருக்கும்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/dhanam.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs