http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





தசாவதாரம்

நடிப்பு
கமல்ஹாசன், அசின், மல்லிகா செராவத், ஜெயப்ரதா, நாகேஷ், நெப்போலியன், சந்தான பாரதி

எடிட்டிங்
கே.தணிகாசலம்

கலை
தோட்டாதரணி, சமீர் சந்தா, எம்.பிரபாகரன்

ஒளிப்பதிவு
ரவிவர்மா

பாடலாசிரியர்
வாலி, வைரமுத்து

பின்னணி இசை
தேவி ஸ்ரீபிரசாத்

இசை
ஹிமேஷ் ரேஷமியா

கதை, திரைக்கதை, வசனம்
கமல்ஹாசன்

இயக்கம்
கே.எஸ். ரவிக்குமார்

தயாரிப்பு
ஆஸ்கார் ரவிச்சந்திரன்

     இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் தமிழக முதல்வரும் கலந்து கொள்ளும் விஞ்ஞானி ஒருவருக்கு நடக்கும் பாராட்டு விழாவில், விஞ்ஞானி பெருமாள் சிலை ஒன்றைப் பற்றிப் பேசுகிறார். பிரபஞ்சத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிகழ்வுகள் உண்மையில் ஒன்றையொன்று பாதிக்கக்கூடும் என்னும் அறிவியல் கோட்பாடு (கயாஸ் தியரி) குறித்து விளக்கும் அவரது உரையினூடே விரிகிறது தசாவதாரம் கதை.

     பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு செல்கிறது கதை. ரங்கனாதரின் சிலையை அகற்ற வந்த சிவ பக்தனான ராஜா குலோதுங்க சோழனின் (நெப்போலியன்) படை வீரர்களுடன் சண்டையிடுகிறார் ரங்கராஜன் நம்பி(கமல்). ராஜா "சிவாய நமஹ" என ஓத ஆணையிட்டும் கூற மறுத்த நம்பி "ஓம் நமோ நாராயணா" எனக் கூற சிலையோடு ஜலசமாதி அடைகிறார்.

     மறுபடியும் 21-ஆம் நூற்றாண்டுக்கு வருகிறது கதை. அமெரிக்க விஞ்ஞானி கமல் கோடிக்கணக்கான உயிர்களை அழிக்கக்கூடிய வைரஸ் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அதைக் கடத்தித் தீவிரவாதிகளிடம் விற்க முயல்கிறார் விஞ்ஞானிகளின் தலைவர். அதைக் காப்பாற்றும் / கைப்பற்றும் முயற்சியில் நடக்கும் களேபரங்களில் தவறுதலாக இந்தியாவுக்கு வந்துவிடுகிறது வைரஸ். அதைத் துரத்திக்கொண்டு வரும் விஞ்ஞானி கமலும் வில்லன் கமலும் மோதிக்கொள்கிறார்கள். விஞ்ஞானியைத் தீவிரவாதி என்று நினைத்துப் போலீஸ் துரத்துகிறது. இதற்குள் நடைபெறும் சம்பவங்களில் ஒன்பது விதமான கதாபாத்திரங்கள் வந்து நம்மைப் பரவசப்படுத்துகின்றனர். கடைசியில் திரைக்கதை சுனாமியில் முடிகிறது. நூற்றாண்டுகள் கழித்து விஷ்ணு சிலை புரண்டு வந்து முதல் காட்சிக்கான நியாயத்தை நிலைநாட்ட முயல்கிறது.

     ரங்கராஜ நம்பி, கோவிந்த் சோமையா, அவ்தார் சிங், பலராம் நாயுடு, கிறிஸ்டியன் பிளெட்சர், சிங்கென் நரஹாஷி, ஜார்ஜ் புஷ், பூவராகவன், கிருஷ்ணவேணி பாட்டி, கலிபுல்லா கான் என படம் முழுக்க கமல் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

     இருவேடங்களில் அசின் வந்தாலும் பிராமண பெண் மாத்திரம் கச்சிதம். இசையமைப்பாளர் ஹிமேஷும், ரீரெகார்டிங் செய்துள்ள தேவி ஸ்ரீபிரசாத்தும் அருமையாக செய்திருக்கிறார்கள். ரவிவர்மாவின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி. தோட்டாதரணியின் கலைவேலைப்பாடுகள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.

     கமலின் பத்து அவதாரங்களும் நன்கு வெளிப்படும்படி படத்தை அருமையாக செதுக்கியிருக்கும் கே.எஸ்.ரவிக்குமாரும், பணத்தை தண்ணீராக செலவழித்துள்ள தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மொத்தத்தில் கமலின் திரையுலக வரலாற்றில் இப்படம் ஒரு மைல்கல்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/dasavatharam.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs